கலைஞர் குறித்து எழுத்தாளர் சுஜாதா சொன்ன பதில்! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
கலைஞர் குறித்து எழுத்தாளர் சுஜாதா சொன்ன பதில்! | கலைஞர் 100
Published on

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

ஜூன் 7, 1998 கல்கி இதழில் கலைகர் பற்றி ஏராளமான வி.ஐ.பி.க்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றிலிருந்து சில துளிகள்:

எழுத்தாளர் சுஜாதா:

கலைஞர் அவர்களின் பொது வாழ்வில் அரசியல் அல்லாத பல கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கு உண்டு.

ஆனந்தவிகடன் வைர விழாவிலிருந்து துவங்கி பல இலக்கிய விழாக்களில் கலைஞருருடன் ஒரே மேடையில் தோன்றும்போது முதன் முதல் நான் தெரிந்து கொண்டது “எல்லோரும் அவர் பேச்சைத்தான் கேட்க வந்திருக்கிறார்கள்" என்பதே. அதனால் நம் முறை வரும்போது வளவளவென்று பேசிக்கோண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று அந்தக் கூட்டங்களில் கலைஞர் கவனிக்க வேண்டிய விஷயங்களை எழுதி வைத்துப் படித்து விடுவேன்.பொதுவாகவே அந்தக் கூட்டங்களில் ஒரு விதமான பரபரப்பும், பொறுமையின்மையும் நிலவும்.

கலைஞர் பேச ஆரம்பித்தவுடன் அது அடங்கிவிடும். எத்தனை பேசினாலும், இரவு எத்தனை மணி நேரமானாலும் இறுதி வரை காத்திருந்துவிட்டு , அவர் பேச்சு முடிந்த உடனே கலைவார்கள். இதனாலேயே கலைஞரின் பேச்சை விழா ஏறாட்டாளர்கள் கட்டக் கடைசியில் வைப்பார்கள்.

இந்தக் கூட்டங்களில் அவருடன் நேராகப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத் ததில்லை. அதிமுக அரசோச்சும்போது ஒரு முறை முரசொலி அலுவலகத்தில் கொஞ்சம் நிதானமாக அவரைச் சந்தித்துப் பல விஷயங்களைப் பேச முடிந்தது.

அப்போது திமுக அரசு திரும்ப வரும் என்கிற நம்பிக்கையின் ஆரம்பங்கள் துளிர்க்கவில்லை. ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற திருமணத்திற்கு நான் நண்பர் ராம்குமார் அவர்களின் அழைப்பின் பேரில் போயிருந்ததைச் சொன்னேன். அந்தத் திருமணத்தின் ஆடம்பரமே மீண்டும் அவர் பதவிக்கு வர வழி வகுக்கும் என்று எனக்குத் தெரிந்தது. அதைச் சொன்னபோது, எதும் பரபரப்பில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். “பதவிக்கு வரதும், அது போறதும் எனக்கு பழக்கப்பட்ட விஷயங்க" என்றார்.

பவள விழாக் காணும் கலைஞரின் சேவை தமிழ்நாட்டுக்கு ஆளுங்கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ எப்போதும் தேவைப்பட்டாலும்

இடையிடையே 'குறளோவியமும்". 'சங்கத் தமிழும்' 'பொன்னர் சங்கரும்" "தென்பாண்டிச் சிங்கமும் எழுதும் கலைஞரின் பங்குதான் அதிகமாக லேண்டும். அதற்காக அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நல்குமாறு ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன்.

கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஏ.சுப்ரமணியம்:

வியக்கத்தக்க நினைவாற்றல், நல்ல நிர்வாகத் திறன், உடனுக்குடன் புகார்களுக்கு தக்க உதாரணத்தோடு பதில் கூறி விளக்கும் அவரின் ஆற்றல் அலாதியானது. ஆரம்பக் காலங்களில் தொழிலாளர்களின் பால்நல்ல ஈடுபாடு காட்டியவர். இப்போது பஞ்சாலைத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உன்ன நிலைவில் கொஞ்சம் கவனித்தால் எங்கள் நெஞ்சில் நிம்மதி நிறையும்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் :

“விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்வார்ப் பெறின் “

என்ற திருக்குறளுக்கு “கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகம் விரைந்து

அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்” என்று பொருள்.

இந்தக் குறளைப் போலவே வாழ்க்கையைப் பெற்றவர் கலைஞர். அதனாலேயே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர்.

எழுத்தாளர், பதிப்பாளர் அகிலன் கண்ணன்,

இவரது இலக்கியப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம், அவரது இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளால் கிடைக்கப் பெறாமல் போனது. அவர் அது பற்றிக் கவலைப்படவில்லை. எனினும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் இன்னமும் செய்ய வேண்டும் என நம்பிக்கையான எதிர்பார்ப்பினைத் தூண்டுவிடும் இவரது ஆற்றலே நிகழ்கால சரித்திரம் ஆகும்.

இந்து முன்னணி அமைப்பாளர் இராம். கோபாலன்

எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் திருவருளால் தேசப் பணியும், தெய்வப் பணியும் செய்வதற்காப் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ராஜ் நியூஸ் தொலைக்காட்சி – செய்தி ஆசிரியர் கே.பி. சுனில்

கலைஞர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியா என்ற கேள்வி எழுப்பப்படுமானால், அதற்கு பதில் 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியான காரணம், பல சந்தர்ப்பங்களில் செய்யாத தவறுகளுக்கு அவர் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறார். அதன் காரணமாக அவருக்கு அரசியல் வீழ்ச்சி வந்திருக்கிறது, வரவாற்றில் அவர் பெவர் நிற்க வேண்டுமானால், “குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்!” என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் கொள்கை, லட்சியக் கொடிகளைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

கல்கி 07.06.1998 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com