‘NO’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அடிப்படை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
ஆதியில் பழங்கால மனிதர்கள் குகைகளிலேயே வாழ்ந்தனர் என்பதும் மனிதர்களின் முதல் வாழிடம் குகையே என்பதும் நிறுவப்பட்ட உண்மை!
குகைகளில் வாழ்ந்த அக்காலத்தில் தங்கள் இருப்பிடத்திற்கு பண்டையத் தமிழர் வைத்த பெயரே - இல்!
தமிழ் மொழியில் 'இல்லுதல்' - என்ற வினைச்சொல் குடைதல், தோண்டுதல், துளைத்தல், உள்ளீடு இலாது செய்தல் போன்ற பொருள்களைப் பெறும்.
இல்லப்பட்டது இல்.
இல்லில் பெரியது இல்லம். அந்த காலத்தில் குகைதான் இல், இல்லம்!
இன்றைக்கு நாம் வாழும் வீட்டை இல்லம் என்றும் அழைக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட பொருள் குடையப்பட்டால் அங்கு எதுவும் இருப்பதில்லை. இவ்வாறு உள்ளீடு அற்ற நிலையை - "இல்லா நிலை" என்ற பொருளில்தான் "இல்லை" என்று குறிக்கிறோம்.
துளையின் அடிக்கருத்து வெற்றிடம் (Hollow) என்பதால், உண்டு என்ற சொல்லின் எதிர்ச்சொல் 'இல்லை' - என்றானது. இல்லை, இல்லாமை, இன்மை என்பது எதிர்மறைப் பொருள் குறித்தது.
இவ்வாறு தமிழ் மொழியில் இன்மைக் கருத்தைக் குறிக்கும் இல் - என்ற எதிர்மறைச் சொல் ஆங்கில மொழியில் அப்படியே முன்னொட்டாக (prefix) எடுத்தாளப்பட்டு எண்ணிலடங்கா எதிர்மறை சொற்கள் உருவானது. உதாரணமாக... illegal, illegible, illegitimate, illaudable, illicit, illiterate, illogical போன்றவற்றை சொல்லலாம்.
இல் > அல். இல் என்பதே அல் என்று உருப்பெற்று அல்ல, அல்லது போன்ற சொற்களைத் தந்தது.
அல் > அல்ல எனும் தமிழ்ச் சொல்லே -
கிரேக்க மொழியில்... allos.
இலத்தீனில்... alias.
ஆங்கிலத்தில்.... alias என எடுத்தாளப்பட்டது.
அதேபோல்…ஆங்கில மொழியில் 'அன்' (un) - என்பது எதிர்மறை முன்னொட்டாக unhappy, unlike, unless, unnecessary, unexpected போன்ற பல சொற்களைப் படைத்தது.
அடுத்து... தமிழ் மொழியின் 'அல்' என்பதே வடமொழியில் 'ந' என உருமாற்றமடைந்தது.
அல் > அன் > ன (ந).
அன் என்பதன் இலக்கணப் போலி வடமொழியில் ’ந’ ஆகும்.
இந்தி மொழியில் ந, நை ( நயி) என்பவை 'இல்லை' யைக் குறிக்கும்.
அதே போல தெலுங்கு மொழியில்...
இல் > இலது < லேது.
இல் < லே என்று திரியும்.
இவ்வாறு தமிழ் மொழியில் இல்லை, அல்ல என்று தொடங்கிய சொல்...
Old Gothic மொழியில் ni என்றும்,
Gothic மொழியில் ni என்றும்.. உருப்பெற்றது. (Gothic is an extinct East Germanic language).
அடுத்து...
ஆங்கிலோ சாக்சனில்.. ne (நே) என உருமாறி,
ஐஸ்லாந்து மொழியில் nei ( நை) என்றும்
டேனிஷ் மொழியில் nei ( நை) என்றும் மாற்றம் பெற்று... ஆங்கிலம் வந்தடையும் பொழுது nay, no (நே, நோ) என உருமாற்றமடைந்தது.
கடைக்குறிப்பு :
* கடற் கரையில் மணலைத் துளைத்துப் போவது இல்லிப்பூச்சி.
* இல்லி = பொள்ளல், சிறு துளை
முலைக்காம்பில் உள்ளதுபோன்ற துளை.
* இல்லிக்காது = சிறுதுளைக் காது.
* இல்லிக்குடம் = ஓட்டைக்குடம்,ஒழுகும் குடம்.
* இல்லி மூக்கு = ஒழுகும் மூக்கு. இல்லி மூக்குதான் பிறகு சில்லி மூக்கு ஆனது.