கும்பாபிஷேக மருந்து!

கும்பாபிஷேக மருந்து!
Published on

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– ஜி.இந்திராணி, ஸ்ரீரங்கம்

காம்பர சுக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காலி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன் மெழுகு, வெண்ணெய் எனும் எட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது அஷ்டபந்தன மருந்து. கும்பாபிஷேகம் நடைபெறும் அனைத்து கோயில்களிலும் இந்த அஷ்டபந்தன மருந்தைக் கொண்டே மூர்த்திகளின் பிரதிஷ்டை நடக்கும். கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்கே, 'மருந்து சார்த்துதல்' என்ற இந்த அஷ்டபந்தனத்தை சாற்றி விக்ரகங்களை உறுதியாக அமர வைப்பதுதான். இன்று, பல ஊர்களிலும் ரெடிமேடாகக் கிடைக்கும் அஷ்டபந்தன மருந்தை வாங்கிவந்து, வெந்நீரில் போட்டு அப்படியே எடுத்து சார்த்தி சுவாமி சிலையை அதன்மேல் அமர வைத்து விடுகிறார்கள். ஒருசில கிராமங்களில் மட்டும்தான் இன்னும் பாரம்பரியமான முறையில் கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தை இடித்துத் தயாரிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பாலக்காடு கிராமம். இந்த கிராமத்தில் கும்பாபிஷேக அஷ்டபந்தன மருந்தை மிகவும் சிரத்தையாகத் தயாரிக்கிறார்கள்.


பாலக்காடு சுற்றுவட்டாரங்களில் அஷ்டபந்தன மருந்தைத் தயாரிப்பதற்கு மட்டுமல்ல; இடிப்பதற்கும் கணக்கு உண்டு. ஒரு அஷ்டபந்தன உருண்டையின் மேல் 2 லட்சம் முறையிலிருந்து 3 லட்சம் முறை வரை அடி விழ வேண்டும் என்ற கணக்கு உண்டு.
அதற்காக ஊரில் உள்ள இளைஞர்கள் டைம்டேபிள் போட்டுக்கொண்டு இரண்டு மூன்று மாதம் மருந்தின் மேல் மாறி மாறி அடிப்பார்கள். சிலசமயம் பக்கத்து ஊர்களிலிருந்தும் பல இளைஞர்கள் குழுவாக வந்து இதற்கு வேலை பார்ப்பார்கள். ஒவ்வொரு நாளும் அடிக்கக்கூடிய அடிகளை கணக்கு வைத்துக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட லட்சம் அடி வரும் வரை இந்த வைபவம் நடக்கும். அடித்து முடித்த பிறகு, ஒவ்வொரு நாளும் டிபன், பலகாரம் என்று ஜமாவாக இருக்கும். ஒருசில பாலக்காட்டு கிராமங்களில் கும்பாபிஷேகப் பணிகளை அவர்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக்கொண்டு வந்து வேலை பார்ப்பார்கள். இது மாதிரியான பல சுவாரசியங்களும், பாரம்பரியமும் கலந்ததுதான் நமது ஹிந்து தர்மம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com