
– ஜி. பாபு, திருச்சி
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது
வழங்கும் பாடங்கள் அதிகமடா!
வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது
வளமாவது உன் கையில் இருக்குதடா!
சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை
சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா!
எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும்
இன்பத்தை மற்றவருடன் பகிர்ந்திடுடா!
தோல்வியைக் கண்டு துவளாதேடா! நீ
தொடர்ந்து வெற்றிக்கு போராடுடா?
நல்லதே என்றும் நினைத்திடடா! நீதி
நேர்மையுடன் வாழ முனைந்திடுடா!
நல்ல காலமொன்று இருக்குதடா… அதை
நம்பி ஓயாமல் உழைத்திடடா!
புல்லும் பெரும் ஆயுதமடா! அதை
புரிந்து கொண்டு ஜெயித்திடடா!