நகங்களை அழகாக்கும் 12 நெயில் ஆர்ட் டிசைன்கள்!

Nail art
Nail artpixabay.com

நாம் எப்படி நம்மை அழகாக காண்பிக்க ஹேர் ஸ்டைல்ஸ், அழகான உடை, அதற்கேற்ற அணிகலன்கள், காலணி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு நம் நகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியம். சிலர் தங்கள் நகங்களை தினமும் பராமரித்து வருவார்கள். அதனுடன் அழகான வண்ண வண்ண நிறங்களில் நெயில் பாலிஷும் போடுவார்கள். அப்போதுதான் தனது அழகு முழுமையடைந்தது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். அந்தவகையில் நகத்தை கூடுதல் அழகுடன் காண்பிக்க நெயில் ஆர்ட் டிசைன்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்:

1. Marble nail art

Marble nail art
Marble nail artpixabay.com

மார்பில் நெயில் ஆர்ட்டுக்கு வானவில் நிறம் அல்லது நீல நிறம் பயன்படுத்தலாம். இந்த இரண்டு நிறங்களில் உள்ள நெயில் பாலிஷை இரண்டு அல்லது மூன்று துளிகள் தண்ணீரில் சேர்க்கவேண்டும். பிறகு இதனை நகங்கள் அல்லது நகங்களின் நுனிப்பகுதியில் பயன்படுத்தினால் அழகாக மினுமினுக்கும்.

2. Polka dot nail art

Polka dot nail art
Polka dot nail artpixabay.com

ங்களுக்கு விருப்பமான எந்த நிறங்களை வேண்டுமானாலும் இதற்கு பயன்படுத்தலாம். முதலில் ஒரு நெயில் பாலிஷ் பயன்படுத்தியபிறகு புள்ளியிடும் கருவி, பாபி பின், டூத்பிக் ஆகியவற்றைக்கொண்டு வெவ்வேறு நிறங்களில் வெவ்வேறு அளவுகளில் போல்கா டாட் வைத்து அலங்கரிக்கலாம்.

3. Floral nail art

Floral nail art
Floral nail artpixabay.com

ந்த வகையான டிசைனுக்கு முதலில் ஒரு நிறத்தின் நெயில் பாலிஷை பயன்படுத்தவேண்டும். பின்னர் டூத்பிக் பயன்படுத்தி அழகான பூவை வரைந்தால் மலர் நெயில் ஆர்ட் அழகாக இருக்கும்.

பூவின் அடிப்பகுதியில் உள்ள இடத்தைக் கணக்கில் கொண்டு ஐந்து புள்ளிகளை வைக்கவும். பின்னர் அதனை ஒன்றோடுஒன்று சேர்த்து இதழ்களைச் சேர்க்கவும். பச்சை வண்ணத்தில் இலை சேர்த்தால் மலர் ஆர்ட் முடிந்தது.

4. வடிவியல் (geometric) நெயில் ஆர்ட்

வடிவியல் (geometric) நெயில் ஆர்ட்
வடிவியல் (geometric) நெயில் ஆர்ட்pixabay.com

ந்த வகையான நெயில் ஆர்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒன்று. முதலில் இரு நிறங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு நிறத்தின் நெயில் பாலிஷை முதலில் நகத்தில் பயன்படுத்தவும். அது உலர்ந்த பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் டேப்பை வடிவமைக்க வேண்டும். பின்னர் அதனை நகத்தில் ஒட்டி அதன்மேல் இரண்டாவது நிறத்தின் நெயில் பாலிஷை பயன் படுத்தவேண்டும். சிறிது நேரம் உலர்ந்த பிறகு மெதுவாக டேப்பை எடுத்தால் அழகான வடிவியல் நெயில் ஆர்ட் தயார்.

5. Gradient and ombre

Gradient and ombre
Gradient and ombrepixabay.com

தற்கு இரண்டு அல்லது மூன்று நிறங்கள் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். முதலில் ஒரு நிறத்தை நகங்களில் பயன்படுத்தவேண்டும். உலர்ந்த பின்னர் இரண்டு நிறங்களை மேக்கப் ஸ்பான்ஜில் தடவி நகங்கள் மேல் வைத்தால் க்ரேடியன்ட் நெயில் ஆர்ட் ரெடி.

6. Abstract nail art

Abstract nail art
Abstract nail artpixabay.com

ந்த வகையான நெயில் ஆர்ட்டில் வளைவுகள் பலவகையான அளவில் மற்றும் பல நிறங்களில் பயன்படுத்தலாம்.மேலும் ஒரே நகத்தில் புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என அனைத்தையும் பயன்படுத்தலாம். இதுபோன்று ஒவ்வொரு நிறங்களிலும் ஒவ்வொரு நகத்திலும் வெவ்வேறு  டிசைன் பயன்படுத்தினால் அது தனித்துவமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர், சிறுமியருக்கு ஏற்படும் முன்பாத வெடிப்பின் காரணமும், தீர்வும்!
Nail art

7. Black and white nail design

Black and white nail design
Black and white nail designpixabay.com

து நகத்தின் கீழ் பகுதியில் நிலா வடிவத்தில் வரையப்படும் டிசைன். முதலில் நகத்தின் கீழ் பகுதியில் அரை நிலா வடிவின் அளவு இடம்விட்டு மற்ற இடத்தில் வெள்ளை நிற நெயில் பாலிஷை பயன்படுத்தவும். பின்னர் அந்த இடைவெளி விட்ட இடத்தில் கருப்பு நிற நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் Black and white நெயில் ஆர்ட், விரல்களை அழகாகக் காண்பிக்கும்.

8. Coloured tip nail art

Coloured tip nail art
Coloured tip nail artpixabay.com

முதலில் உங்களுக்குபிடித்த நிறத்தை நகங்களில் பயன்படுத்தவேண்டும். அது நன்றாக உலர்ந்தபின்னர் நகங்களின் நுனிப்பகுதியில் வேறு நிறம் கொண்டு மெலிதான ப்ரஷால் வரையவேண்டும். இது பார்ப்பதற்கு எளிமையாகவும் அழகாகவும் இருக்கும்.

9. Line art nails art

Line art nails art
Line art nails artpixabay.com

துவும் ஒரு எளிதான நெயில் டிசைன்தான்.முதலில் ஒரு நெயில் பாலிஷின் நிறத்தைப் பயன்படுத்தி உலர வைக்கவேண்டும். பின்னர் மெலிதான ப்ரஷின் மூலம் நேராகவோ, கோணலாகவோ, செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ அல்லது கோடுகளாகவோ வரையப்படும் பல டிசைன்களைப் பயன்படுத்தலாம்.

10. Pop nail art

Pop nail art
Pop nail artpixabay.com

து வண்ணமயமாகவும் பார்ப்பவர் கண்களைக் கவரக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளைக் கவரக்கூடிய வகையில் இருக்கும். ஒரு நிறத்தின் நெயில் பாலிஷை பயன்படுத்தி உலர்ந்தப் பிறகு நகத்தை சுற்றி கருப்பு நிறமும் ஒரு சிறு வெள்ளை வளைவும் பயன்படுத்துவார்கள்.

இது தவிர கார்டூன் பொம்மைகளும் பயன்படுத்துவார்கள்.

11. Celestial nail art

Celestial nail art
Celestial nail artpixabay.com

ந்த வகையான நெயில் ஆர்ட்டிற்கு அதிகமாக நீல நிறம் மற்றும் வெள்ளை நிறங்கள்தான் முதலில் பயன்படுத்துவார்கள். பின் மெட்டாலிக் மற்றும் மினுமினுக்கும் பாலிஷ் டிசைன் பயன்படுத்தி நிலா, நட்சத்திரம் போன்றவை வரையலாம்.

12. Heart nail art

Heart nail art
Heart nail artpixabay.com

முதலில் நகத்தை ஓவல் வடிவத்தில் பாலிஷ் செய்யவேண்டும். பின்னர் மேலே இதய வடிவத்தின் மேல் பகுதியான அந்த வளைவு மட்டும் வரையவேண்டும். கீழ் ஏற்கனவே கூர்மையாக இருக்கும் என்பதால் இதய வடிவம் வந்துவிடும். பின்னர் நமக்கு பிடித்த நிறங்களால் நிரப்பிக்கொள்ளலாம்.

இதுபோன்ற நெயில் ஆர்ட் மூலம் நகங்களை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை இவையெல்லாம் செய்வதற்கான நேரம் இல்லை, ஆனால், செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளது என்றால் நெயில் ஆர்ட் ஸ்ட்ரிப் கிடைக்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com