பெண்கள் அவசியம் அணிய வேண்டிய 5 அணிகலன்கள் – பலன்கள்!

பெண்கள் அவசியம் அணிய வேண்டிய  5  அணிகலன்கள் – பலன்கள்!
Published on

தோடு: பெண்கள் அணியும் முதல் அணிகலன் தோடுதான். குழந்தை பிறந்த ஒரு வயதிலிருந்து இந்த தோட்டினை அணிய தொடங்குவார்கள். காதில் தோடு அணியும்போது கண் மற்றும் காது நரம்புகள் இணைவதால் இது கண் பார்வையை நன்றாக இருக்க செய்கிறது. மற்றும் மூளையை நன்றாக செயல்பட செய்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

மூக்குத்தி: பருவமடைந்த பெண்கள் மூக்குத்தி அணிவது சிறப்பு. ஏனென்றால் இந்த மூக்குத்தியை நாம் அணியும் நமது மூக்கில் உள்ள சிறிய புள்ளி சிறுகுடல் மற்றும் பெருங்குடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். மேலும், பெண்கள் பருவமடைந்த காலத்தில் மண்டை ஓட்டில் சில வாயுக்கள் உருவாகின்றன. இந்த வாயுக்கள் உருவாமல் முழுவதுமாக வெளியேற்றுவதற்கு மூக்கில் உள்ள இந்த துளை பயன் அளிக்கிறது. அதேபோல கர்ப்பப்பையில் பெண்களுக்கு தேவைப்படும் இயக்கத்தினை அளிப்பதற்கும் மற்றும் சுவாசத்திற்கும் இந்த சிறிய துளை பயன்படுகிறது.

வளையல்:  பெண்கள் கட்டாயமாக அணிய வேண்டிய அணிகலன்களில் வளையலும் ஒன்று. பெண்கள் வளையலை அணியும்போது நமது உடலில் வெள்ளை அணு உற்பத்தியை அதிகரிக்க செய்து ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கு நன்மை அளிக்கிறது. இந்த வளையல் வட்ட வடிவில் இருப்பதால் அதில் ஏற்படும் மின்காந்த ஆற்றல்கள் அனைத்தும் நமது கைக்கு சென்று உள்ளங்கை நன்றாக செயல்பட செய்கிறது. இது பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

கொலுசு: பெண்கள் காலில் கொலுசு அணிவதால், குதிகாலில் இருக்கும் நரம்பின் வாயிலாக கல்லீரல், சிறுநீர்ப்பை, மண்ணீரல், பித்தப்பை மற்றும் வயிறு போன்ற அனைத்து பகுதிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் இந்த நரம்பு மூளையும் நன்றாக செயல்பட ஊக்குவிக்கிறது. ஆகையால் பெண்கள் கட்டாயமாக கொலுசு அணிய வேண்டும்.

மெட்டி:  திருமணமான பெண்கள் மெட்டி அணிய வேண்டும். மெட்டியை காலில் அணியும்போது காலில் உள்ள நரம்பு கர்ப்பப்பை இணைந்து பிரசவ நேரத்தில் இது பெண்ணை நன்றாக இருக்க செய்கிறது. இந்த மெட்டி கர்ப்பப்பையில் இருக்கும் நீரின் அளவினை சரியாக இருக்கச் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com