
முதுமையின் சுருக்கங்கள் இதயத்தைத் தொடக்கூடாது ; நம்பிக்கையாகவும், கனிவாகவும், உற்சாகமாகவும், கண்ணியமாகவும் வாழுங்கள். முதுமையை வெற்றிகொள்ள இதுதான் ஒரே வழி ! - தமஸ் பெய் ஆல்ட்ரிச்
முதுமையை வெல்ல முடியாது, ஆனால் இப்பருவத்தை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து முதுமையை நலமாக தள்ளிப்போடலாம். முதுமையில் இளமை ஐம்பது வயதில் ஆரம்பமாகிறது. இதோ சில பயனுள்ள குறிப்புகள், முயற்சித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்வில் ஒரு வசந்தம் வீசும்.
வருமுன் காக்க
ஐம்பது வயதிற்குமேல் பலருக்கு உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக இருக்கிறது. பல நோய்கள் எவ்விதத் தொல்லையுமின்றி மறைந்திருக்கும்.
உதாரணம்: நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மறைந்திருக்கும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கலாம்.