
போற்றக்கூடிய பெண்:
1. இந்தப் பெண்ணால் அடுத்தவர்களின் எல்லைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். தன்னுடைய தனிப்பட்ட எல்லைகளை நன்கு அறிந்த பெண்ணால் மற்றவர்களைப் புரிந்து கொண்டு மரியாதையாக நடத்த முடியும்.
2. இந்த அவசரமான உலகத்தில் உடனடி முடிவுகள் மற்றும் உடனடி தீர்ப்புகளுக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது. ஆனால், அனுதாப உணர்வு கொண்ட பெண் பிறர் கூறுவதை நன்கு கேட்டு உணர்ந்து உறவின் பிணைப்பை மேம்படுத்துபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் அனுபவங்களை நன்கு புரிந்து கொண்டு அவர்களை பலப்படுத்துவார்கள்.
3. இந்தப் பெண்கள் தங்கள் குணங்களைப் பற்றிய நல்ல புரிந்துணர்வில் இருப்பதால் தான் தவறு செய்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். உண்மையில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.
4. நல்ல நாகரீகமான பெண் தான் செய்யும் செயல்களைக் குறித்துப் பெருமையாக தம்பட்டம் செய்யமாட்டார். மாறாக தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவார். தங்களுடைய அறிவுத் தேடலால் அனைவரையும் தன்பக்கம் ஈர்க்கக் கூடிய பண்பைப் பெற்றிருப்பார்.
5. ஒரு நாகரீகமான பெண் உண்மையை பேசுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்கள் கூறுவதை எந்த தீர்ப்பும் கூறாமல் கேட்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார். அவர்களுடைய உரையாடலில் மரியாதை அன்பு, நேர்மை இவை தெளிவாக வெளிப்படும். இதனால், பேசும்போது நல்ல புரிந்துணர்வு ஏற்படும். அவர்களுடைய தன்னம்பிக்கையும் வெளிப்படும்.
6. அவள் மனிதாபிமானம் நிறைந்த குணத்தால் எவரும் பயமில்லாமல் அவரை அணுகக் கூடியவராக இருப்பாள். தாங்கள் எவ்வளவுதான் சாதித்திருந்தாலும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
7. ஒரு ஒழுக்கமான பெண் மற்றவர்கள் தனக்கு நன்றி கூறுவதை எதிர்ப்பார்த்து உதவிகள் செய்ய மாட்டார். உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைவதாலும் அதில் விருப்பமுள்ளதாலும் மற்றும் மற்றவர்களை திருப்தி படுத்துவதாலும் மகிழ்ச்சி அடைவார்.
8. அவள் எந்தவித கடுமையான சூழலையும் தைரியமாக எதிர் கொள்வாள். பலவித சூழலை எதிர் கொள்ளும் போது இறுக்கமான சூழ்நிலை நீங்கி புதிய முடிவுகள் உருவாக்கத்தக்க சூழலை அவர் ஏற்படுத்துவார்.
9. வாழ்வில் நல்ல மதிப்புகளின் மீது நம்பிக்கை வைத்து அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய வகையில் செயல்பட்டு உண்மையை நிலை காட்டுவதில் அதிக அக்கறை செலுத்துவதால் எல்லோராலும் நம்பத்தகுந்தவளாக இருப்பாள்.