ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி!

ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி!

மையலில் சுவையும் மணமும் சேர்க்கும் கொத்தமல்லிக்கு மருத்துவ பயன்களும் உண்டு. ரசம், சாம்பார், சட்னி, பச்சடி, மோர் குழம்பு என்று பலவகை உணவுகளில் கொத்தமல்லியின் பங்கு பெரிது ‌

கொத்தமல்லியில் வைட்டமின் சி இரும்புச்சத்து பி காம்ப்ளக்ஸ் தாதுக்கள் என பல சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் சிறிது மல்லி தழையை மென்று தின்றால் பசியை தூண்டும்.

சமோ குழம்பு எதுவானாலும் இறக்கி வைக்கும் முன் மல்லி தலையை போட்டு மூடி வைத்து பிறகு சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணம் ஆகும் ‌

து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது ரத்த கொதிப்பு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

கொத்தமல்லி மலச்சிக்கலை தீர்க்கிறது.

யிர் அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. கர்ப்பப்பையையும் திடப்படுத்தும்.

கொத்தமல்லியை அரைத்து பயத்தம் பருப்பு மாவுடன் கலந்து முகப்பரு புண்கள் மீது பூசி வர, அவை விரைவில் ஆறிவிடும்.

தினமும் உணவில் கொத்தமல்லியை சேர்த்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும் நீரிழிவு தொல்லை வராது.

தடுகள் கருமை நிறமாக இருந்தால் கொத்தமல்லி சாற்றை உதடுகளில் தடவி வர இயற்கை நிறம் கிடைக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com