* மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் அமைந்துள்ள கோயில்தான் ஸ்ரீ யோக நரசிங்கப் பெருமாள் கோவில். குடைவறை கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் மிகவும் பெரிய நரசிம்ம பெருமானின் உருவம் உள்ளது. பொதுவாக சிவன் கோயிலில் பிரதோஷம் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறதென்றால் அது இந்த கோயிலில் மட்டும்தான்.
* தென் வியட்னாமின் தலைநகராக நகராக இருந்த சைக்கோன் நகரில் காளி கோயில் உள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியரின் குண்டு வீச்சால் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் காளி கோவில் மட்டும் தப்பியது. இந்த காளி தேவியை சைக்கோன் நகர இந்து மதத்தினர் மட்டுமல்லாமல், புத்த மதத்தினரும், பிற மதத்தினரும் பக்தியுடன் வழிபடுகின்றனர்.
* கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் உள்ள ஜோதிர் லிங்கம் தங்கக் கூட்டினால் பிரிக்கப்பட்ட சுயம்புலிங்கமாகும். இது ஸ்வர்ண (தங்க) ரேகை என அழைக்கப்படுகிறது.
* நாமக்கல் குகை கோவிலில், சிவன் பாதி, விஷ்ணு பாதியாக காட்சி தரும் ஈஸ்வரன், நாகத்தை கையில் ஏந்திய கோலம் அற்புதமானது.
* சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில், கரபுரநாதர், வீரட்டேஸ்வரர், பீமேஸ்வரர், திருவேலிநாதர் கோவில்களை பஞ்சாட்சர கோவில்களாக போற்றி வழிபடுகின்றனர்.
* திருச்சி தென்னூரில் உள்ள உக்கிர மாகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரத்தை கடந்ததும், வலது புறம் திருவோடு மரம் தலமரமாக உள்ளது. மக்கள் பேறு வேண்டுவோர், இம்மரத்தில் தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். இம்மரத்தில் திருவோடு காய்கள் காய்த்து தொங்கும். முற்றிய காய்கள் கீழே விழுந்தால் சரி பாதியாக பிளக்க, இரண்டு திருவோடுகள் கிடைக்கும். தேவைப்படுவோர் இலவசமாகவே எடுத்துச் செல்வார்கள்.
* சிதம்பரம் நடராஜர் கோவிலில் 16ஆம் நூற்றாண்டில் சிற்ப பணிகள் செய்த நான்கு சிற்பிகளின் சிலைகள் கோவில் வடக்கு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
* சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை செதுக்கிய சிற்பியின் பெயர் எக்காட்டூர் சேரன் பெருபரணன் என்ற விவரங்கள் உள்ளன.
* திருவனந்தபுரம் பத்மநாப கோவில் பத்மநாப சுவாமி கோவில் பணிகளை செய்த பெருந்தச்சன் அனந்த பத்மநாப ஆசாரியின் சிலை, கோவிலில் உள்ளது.