- வாணி கணபதி
1. துளசிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சளி குறையும்.
2. இருமல், சளி, மூக்கடைப்பு தீர்வு: இஞ்சி ஒரு துண்டு, பட்டை சிறிய துண்டு, அன்னாசிப் பூ- 2, மூன்றையும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, ஒருஸ்பூன் தேன், எலுமிச்சைசாறு கலந்து மிதமான சூடு இருக்கும்போது குடித்துவர மழைக் காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.
3. சம்பா கோதுமை வறுத்து, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட, முதுகு வலி குணமாகும்.
4. ஓம வல்லி இலை நறுக்கி தண்ணீர் விட்டு காய்ச்சி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மூச்சுத்திணறல், இதயப் பிரச்னை தீரும்.
5. ஆரஞ்சு பழச் சாறு எடுத்து பருகி வந்தால் சுவாசப் பிரச்னைகள் தீரும்.