
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – ¼ கிலோ, தேங்காய்த் துருவல் – ½ கப், கசகசா - 1 ஸ்பூன், முந்திரி - 15, சர்க்கரை – 1 கப், ஏலப்பொடி - 1 ஸ்பூன், சாரைப் பருப்பு - 1 ஸ்பூன், வெள்ளரி விதை - 1 ஸ்பூன், குங்குமப்பூ - சிறிது, வறுத்த முந்திரி - 1 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், முந்திரி, கசகசா மூன்றையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். (கசகசா, முந்தி இரண்டையும் வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து சர்க்கரை, ஏலப்பொடி, தண்ணீர் 1 கப் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு பால் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி வைத்து சாரை பருப்பு, வெள்ளரி விதை, குங்குமப் பூ, வறுத்த முந்திரி இவைகளைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.