இங்கிலாந்து ராணியின் மகுடத்தில் உள்ள கோஹினூர் வைரம் திரும்பக் கிடைக்குமா?- வள்ளியம்மை, புதுக்கோட்டைஅது மட்டும் கிடைச்சா போதுமா? லண்டன் மியூஸியம், அரண்மனை, அரசக் குடும்பங்கள் என எல்லா இடங்களிலும் நம்ப நாட்டுல இருந்து கொள்ளை அடிச்சுக்கிட்டுப் போன பெருஞ்செல்வம் குவிஞ்சுருக்கே! அத்தனையும் வரணும்னா நூறு கப்பல்களும் போதாது!அப்படியே திரும்பக் கிடைச்சாலும், அது ‘பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சொந்தமானது’ என ஒரு தரப்பு களத்துல குதிச்சிருக்கு! டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிச்ச நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில முளைவிட்டு வீணாய்ப் போயிருக்கு! மனிதன் பசியாற மிகவும் அவசியமான நெல்மணியைக் காப்பாத்தவே நமக்கு வக்கில்ல; இதுல கோஹினூர் வைரமணி! அது எந்த பாடுபடுமோ?“அடிக்கடி திருட்டு போறதால, டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபான பாட்டில்கள் பத்திரமான இடத்துக்கு மாற்றம்”னு வந்த வால்செய்தியையும் இங்கே சேர்த்தே படிச்சுடுங்க... கோஹினூர் வைரச் சுரங்கமே கிடைச்சுட்ட மாதிரி தெம்பா இருக்கும்!.அனுஷா, சமீபத்துல பார்த்த நல்ல படம் எது? வாசகியருக்கு சிபாரிசு செய்யுங்களேன்!- உஷா முத்துராமன், திருநகர்கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடுவேன். சீதா... ராமான்னு! துல்கர் சல்மான் - மிருணாள் தாக்கூர் நடிச்ச ‘சீதா ராமம்’ படத்தை ஒ.டி.டி.யில் பார்த்தேன். இராணுவப் பின்னணியில் ரம்யமான காதல் கதையை, ஆச்சர்யமான திருப்பங்களுடன் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவப்புடி!சீதா, காதலுக்காகச் செய்யும் தியாகமும், ராம், நாட்டுக்காகச் செய்யும் தியாகமும்... உண்மையிலேயே நெகிழ வைக்கின்றன.காஷ்மீரின் ரம்யத்தையும், குளிரையும் நமக்குள் அதே அளவில் ஜில்லென்று கடத்திய கேமிரா, இசை, கலை என மொத்த டீமுக்குமே ஸ்பெஷல் பாராட்டு உரித்தாகுக!துல்கர்-மிருணாள் கெமிஸ்டரி வேறு வர்க் அவுட் ஆகிவிட்டதால், மனம் கிளைமேக்ஸில் கனத்துத்தான் போகிறது. படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும். ப்ளீஸ் வாச்!.ஆயிரம் ஆடுகளுக்கு வேலை கொடுத்துள்ளதே கூகுள் நிறுவனம்?- ப்ரியா சுவாமி, சிங்கப்பூர்இதையே நானோ, நீங்களோ செஞ்சிருந்தா “லூஸா நீங்க?”ன்னு கேட்டிருப்பாங்க! பெட்ரோல், டீஸலில் இயங்கும் புல்வெட்டும் கருவிகளுக்கு டாடா சொல்றதுக்கும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும், செம்மறி ஆடுகளைப் புல்தரையில் மேய விட்டிருக்காங்களாம்.அந்த ஆடுகளை மேய்க்கவும், தண்ணீர், தீனி வெச்சு மீண்டும் பட்டியில் அடைக்கவும் ஆட்கள் தேவை. அது குட்டி போடும். பராமரிக்க ஆட்கள் தேவை. கால்நடை மருத்துவர்கள் தேவை. தோலுக்கும் இறைச்சிக்கும் அனுப்ப வண்டிகள் தேவை! கடைசியில கூகுள்ல வேலைக்குப் போனாலும் ஆடு மேய்க்கத்தான் போகணும் போல!.சமீபத்தில் யாரைப் பார்த்து அதிசயப்பட்டீர்கள்?- எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி‘யாரைப் பார்த்து’ என்பதை உங்கள் சம்மதத்துடன் ‘யாரை நினைத்து’ என்று லைட்டாக மாற்றிக்கொள்கிறேன் மேடம்!72 ஆண்டுகளுக்கு முன், ஒரு மனிதர் சரித்திரத்தையும் கற்பனையையும் லேஸாக ஒரு மிக்ஸ் அடிச்சு, மர்மநாவல் போன்ற விறுவிறுப்பான கதை எழுதுகிறார். அது என்னடான்னா, அச்சு, டிஜிட்டல், தியேட்டர், ஆடியோ புக், அனிமேஷன் என்னென்ன நவீன வடிவங்கள் இருக்கோ எல்லாத்திலும் சூப்பரா ரவுண்டு கட்டி ஹிட் அடிக்குது! ஜனங்களுக்கு போரே அடிக்கல! அப்படியொரு மயக்கம்! இப்ப, அந்த ஜீவிதப் பொக்கிஷம் சினிமாவாகவும், அதுவும் 5 மொழிகள்ல ரீலிஸாகப் போகுது! படம் எப்படியிருக்குமோ தெரியலை! ஆனா, அதுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு என்னை ஆச்சரியப்பட வைக்குது! அந்த அதிசய மனிதர்... ‘அமரர் கல்கி’யைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?