அன்புவட்டம்

அன்புவட்டம்
Published on

பொன்னியின் செல்வன்’ – பார்த்தாச்சா?

- வாணி வெங்கடேஷ், சென்னை

ல்லை! (ஒ.ஸி. பாஸ் வரவில்லை... ஹி...ஹி) ஆனால், சமூக வலைத்தளத்தைத் திறந்தால், ஆனந்தமாய் வாரி அணைப்போரும், சேற்றை வாரி இறைப்போருமாக... செம ஹைப்பு!

அமரர் ‘கல்கி’யின் ‘பொன்னியின் செல்வன்’ எனப் பார்க்காமல், ‘மணி’யின் செல்வன் என்ற கோணத்தில் ‘ஜஸ்ட் எ மூவி!’ என்று பார்த்தால், படம் நன்றாக இருக்கிறது என்பதே பலருடைய கருத்து.

இந்தப் படத்தால் ஒரு நன்மையும் விளைந்திருக்கிறது. தமிழ் தெரியாத அல்லது தமிழ் படிக்கவே விரும்பாத இளைய தலைமுறை, ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் அல்லது ஆங்கிலப் பதிப்புகளையோ, ஆடியோ புக்கையோ தேடித் தேடி படிக்க, கேட்க தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

அது அப்படியே ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு...’ இன்னும் பிற தமிழ் இலக்கியங்கள் எனத் தொடர்ந்தால் மகிழ்ச்சியே!

*******************************************************

‘திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்’ – என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியள்ளதே!

- பவானி சுந்தரம், பீளமேடு

ஸ் யுவர் ஆனர்! உங்கள் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.

“ஐயோ... கலாசாரம் போச்சே! நம்பப் பண்பாடு, பெண்மை, தாய்மை என்னாகும்?” என அடடா... எவ்வளவு முதலைக் கண்ணீர் ஆண் குல வீரர்களிடமிருந்து! 

பதினாலு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தாய்மை அடைகிறாள்!

காதலன் ஆசை காட்டி ஏமாற்றிவிட்டு ஓடிவிடுகிறான்.

மனம் விரும்பிச் சேர்ந்து வாழ்ந்தாலும், காதலி கர்ப்பம் ஆனதும் ஆண் ஆனவன் கழற்றிவிடுகிறான்.

இருவர் சேர்ந்து செய்யும் ஒரு செயலுக்கு பெண் மட்டுமே குற்றவாளியாகப் பொறுப்பாக்கப்படும்போது, அந்தக் குழந்தையை ஏற்பதும், மறுப்பதும் அவளது உரிமை!  சட்டப்படியான, பாதுகாப்பான கருக்கலைப்புக்குத் திருமணமாகாத பெண்களும், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களும் தகுதியானவர்கள்தான். நல்ல தீர்ப்பு!

*******************************************************

நவராத்திரி திருநாளில் ‘மங்கையர் மலர்’ வாசகியருக்கு ‘அன்புவட்டம்’ அனு மேடம் வழங்கும் அன்புப் பரிசு என்னவோ?

- ச. சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

செப்டெம்பர் 21ம் தேதி நள்ளிரவு 12.19 மணிக்கு நீங்க அனுப்பிய ஈ மெயில், சில நிர்வாகக் காரணத்தால் எனக்குத் தாமதமாகக் கிடைத்ததால், இந்த ஜோக்கையே அன்புப்பரிசாக, (லேட்டாகக் கிடைத்தாலும் லேட்டஸ்ட்டாக) ஏற்றுக்கொள்ளவும் சிவசங்கரி மேடம்!

“கடவுள் எதிர்ப்பாளர்களும், பகுத்தறிவுவாளர்களும் மிக்க இந்த ஆட்சியில், கோயில்களில் நவராத்திரிப் பூஜைக்கு எப்படி அனுமதி வாங்கினாங்க?”

“துர்கா பூஜை’ன்னு சொன்னாங்களாம். உடனே ஒ.கே. ஆயிடுச்சாம்!”

*******************************************************

தியானம் செய்ய சரியான நேரம் எது மேடம்?

- எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன்

தியானம் செய்ய சிறப்பான நேரம் என்னவென்றால்... மத்‘தியானம்’தான்! சாப்பிட்டவுடன் என்னமா தூக்கம் வருது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com