பிரதமர் மோடிக்குப் பரிசாக அளிக்கப்பட்ட 1200 பொருட்கள் ஏலத்தில் விடப்படுகிறதாமே?- எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன்இந்த ஏல விற்பனை அவருக்கு ஒண்ணும் புதுசில்லை. அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதே செய்து பணம் திரட்டுவார். மன்மோகன் சிங், தாம் பிரதம மந்திரியாக இருந்து விடைபெற்ற போது, 101 பரிசுப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.ஆனால், மோடி எந்தப் பொருளுடனும் பற்றுதல் வைத்துக்கொள்ளத் தேவையில்லாத அல்லது பிடிக்காத மனிதர் என்பதால், ‘பெண் குழந்தை கல்வி’, ‘கங்கையைச் சுத்தமாக்கும் திட்டம்’ என நல்ல காரியங்களுக்குச் செலவிடுகிறார். சிலவற்றை தேசிய அருங்காட்சி யகத்துக்கும் தருகிறார்.மனைவி: ஏங்க, நீரஜ் சோப்ராவோட ஈட்டிய மோடி பர்த்டே ஏலத்துல வாங்கலாமா?கணவன்: அடியாத்தி! ரத்தக்காவு கேட்கும் போலயே! வீட்டுல சண்டைன்னு வந்தா சூதானமா போயிடணும்டா!**************************************சமீபத்தில் நீங்க முணுமுணுத்தப் பாடல்?- விசாலாட்சி, காரைக்குடி.‘ஷாக் அடிக்குது சோனா!’ (காமன் கரென்ட் பில்!)**************************************நயன்தாரா – விக்னேஷுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனவே!- விமலா குமரேசன், வந்தவாசி.5G நெட்வொர்க்கைவிட படு ஸ்பீடா இருக்கே! அடேயப்பா! கல்யாணமாகி நாலே மாசத்துல, டபுள் டமாக்கா? காத்து வாக்குல ரெண்டு குவா குவா!நயன்தாராவுக்கு உடல்ரீதியாக ஏதோ பிரச்னை இருப்பதால், வாடகைத்தாய் முறையில் குழந்தைகள் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா...!எப்படியோ, ‘மனம் இருந்தால் மார்கப் பந்து!’ ‘பணம் இருந்தால் ரெடிமேட் பேபீசும் உண்டு! வாழ்த்துகள் நியூ மம்மி!**************************************திருமணமாகி இரண்டே மாதங்களில் கருத்து வேறுபாடு வந்துள்ள தம்பதி, முடிவெடுக்கத் தெரியாமல் இருக்கும் போது, என் சார்பில் தாங்கள் சொல்லும் அறிவுரை?- சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்..“வெளியிடங்களில் மத்தவங்களை வெல்ல நினைக்கலாம். ஆனால், வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துத் தோற்றுப் போங்க! அப்பதான் வாழ்க்கையில ஜெயிக்கலாம்”னு அனுமேடம் சொல்றாங்கன்னு சொல்லிப் பாருங்க.“அவங்களுக்கு என்ன? வாயால சொல்றது ஈஸி! வாழ்ந்து பாருங்க... ஒரே டார்ச்சர்”னு சொல்வாங்க!“கடும் புகைமூட்டத்துல மாட்டிக்கிட்ட மாதிரி மூச்சு முட்டுதா?”அது முதல் அறிகுறி! ஒரு கல்யாண பந்தத்துல சந்தோஷம் இல்லாட்டாலும், துரோகம், மூச்சுத் திணறல், பயம், கைநீட்டல், பொய்...எல்லாம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தா வெளியே வந்துடுங்க”ன்னு சொல்லிடுங்க!அப்புறம் ஆண்டவன் விட்ட வழி! வக்கீல்களாவது வாழட்டும்!!