அனுஷாவுக்குப் பிடிச்ச தீபாவளி பட்சணம் எது? நான் பார்சலில் அனுப்பி வைக்கிறேன். பதிலை எதிர்ப்பார்க்கலாமா? சம்மதமா மேடம்?- நா.புவனா நாகராஜன், செம்பனார்கோவில்புவனா ஒரு ஆச்சரியக்குறி! அன்பின் பொறி! நன்றி புவனா மேடம்! ‘பிடிச்ச இனிப்பு’ என்றதுமே ஊறிய உமிழ்நீரை விழுங்கிக்கொண்டு எழுத வேண்டியதாச்சு! நீங்களும் படிக்கும்போது டிட்டோ... டிட்டோ! செய்ய என் ஆசிகள்!முதல் ஸ்வீட்:- பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போல, கெட்டியான இளமங்சள் பாலில் சொகுசாக பாதாம், பிஸ்தா துருவல்கள் சமேதமாக மிதக்கும்! குங்குமப்பூ? அது இல்லாமலா?செகன்ட் சாய்ஸ்:- பார்க்க, பெருமாள் கோயில் பட்டைநாமம் போல இருக்கும்! இரண்டு மஞ்சள் லைன். நடுவே ஒரு வெள்ளைக் கோடு! நடு சென்டரில் சிவப்பு நிற ப்ளம்! நாக்கில் சுவை கதகளி ஆகும்.மூணாவது:- ‘க்’னு அழுத்தற வேலையெல்லாம் கூடவே கூடாது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல விஜய் சேதுபதி சொல்வாரே... அதுமாதிரி ‘பா!’ மட்டும்தான்! வாயில வெச்சதும் தொண்டைக்குள்ளேயே போகக்கூடாது. அப்படியே கரைச்சு மாயமாயிடனும்.லாஸ்ட் அண்ட் ஃபைனல்:- பார்க்கிறதுக்கு நம்ப குலாப்ஜாமூன் மாதிரி சாதுவா இருக்கும்! ஆனா ஸ்பூனை உள்ளே இறக்கினா, முந்திரி, வெள்ளரி விதை, பாதாம் கோவான்னு என்னென்னமோ இனிய ரகசியங்கள் மேலே வரும் பாருங்க! வேற லெவல்!ஏம்மா... பிடிச்ச ஸ்வீட்டு எதுன்னு கேட்டா ‘ரஸமலாய், சம்பாக்கனி’, ‘மைசூர்பா’, ‘மக்கன் பேடா...’ன்னு நேரடியா சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே? இதுல என்ன பதினெட்டு சித்தர் குறி்ப்பு மாதிரி ரகசிய கோட்வர்டு?என்ன பண்றது? நம்ப டாக்டர்தான், ‘இனிப்பு’ன்னு எழுதினாலே சுகர்லெவல் ஏறிடும்னு பயமுறுத்தியிருக்காரே!************************************************.தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்தி பேசுகிறார்களே மேடம்?- எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடிஉங்களுக்கு உங்கப் பிள்ளைங்க ஹிந்தி படிக்கணும்னு ஆசை இருந்தா... தமிழக அரசியல் பெரும்புள்ளிகள் நடத்தும் தனியார் பள்ளிகள்ல காசு கொடுத்து படிக்க வையுங்க மேடம்!அதை விட்டுட்டு, ஓ.சி.யில அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கணும்னு நினைச்சீங்க... அவ்வளவுதான் மீண்டும் ஒரு மொழிப் போர் வெடிக்கும். ஆமா... சொல்லிப்புட்டேன்.************************************************.அனுஷா, தீபாவளிக்கு எங்கே துணி எடுத்தீங்க?–எஸ். மங்களா, சென்னைபேருதான் ரங்கநாதன் தெரு? ஆனா, அந்த அரங்கன் அமைதியாய், ஆனந்தமாய் நித்திரையில் ஆழ்ந்ததாய் சரித்திரமே இல்லை! அந்த ஷாப்பிங் கடலில் லைஃப் ஜாக்கெட் துணையோடு, நீங்க தொபுக்கடீர் என விழுந்தாபோதும்... யாரோ சில ஆபத்து உதவிகள் உங்களை அப்படியே தள்ளிக்கிட்டு, வந்து மெயின் ரோடுல விட்டுடுவாங்க! நீங்களும் உஸ்னு கிண்டி காடுல இருந்து தப்பிச்சு வந்த ராஜ்பவன் மான் போல, சிரமப் பரிகாரம் பண்ணிக்க ஏற்பட்ட ரோடுதான் ‘உஸ்’மான் ரோடு! அப்புறம் கார் பார்க்கிங் தேடி ‘பாண்டி’ ஆட்டம் ஆட வேண்டிய பஜார்... ‘பாண்டி பஜார்’...’ சரி... இந்த இடமெல்லாம் பேஜார்னு இந்தமுறை ஆன்லைனில் ஒத்த புடைவைய ஆர்டர் செஞ்சேன்! கேஷ் ஆன் டெலிவரி! மறு நிமிஷத்துல இருந்து, ஃபோனை எடுத்தாலே, எல்லா மாநில புடைவைக்காரர்களும் வீடியோவும், இமேஜும் அனுப்பி... இம்சை அரசனின் பில்டப் டார்ச்சர் தாங்கலை!இதுக்கு நம்ப பழைய தோஸ்த் ரங்கநாதனே தேவலை! ஆல்வேஸ் ஓல்டு ஈஸ் கோல்டு மா!************************************************.பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி தரப்பட்டிருக்கிறேத?- எஸ். வைத்தி, மேட்டுர்இந்த காமெடி வருஷா வருஷம் அரங்கேறுவதுதானே1 ‘சாஸ்திரத்துக்கு இரண்டு வெடியாவது வெடிக்கணும்’னு என்னோட தொண்ணூறு வயசு மாமியார் இரண்டு கம்பி மத்தாப்புகளை கொளுத்திவிட்டு மகிழ்வார். என் மகனோ, “பறவைகள், நாய்கள் எல்லாம் பயப்படுது. நோயாளிகள், குழந்தைகளுக்கு சிரமமாகுது! நோ – போல்யூஷன்! நோ பட்டாசு!” என்பான்.ஆனால் நானோ நியூட்ரல்!கந்தகத்திலும், கன் பவுடரிலும் நாளெல்லாம் குளித்து, நமக்காக பட்டாசுத் தயாரிக்கும் அந்த எளிய உழைப்பாளி களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, பட்டாசு வாங்கி, வேலையாட்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விடுவேன்!ஒன்லி சிவகாசி! நோ சீனவெடி.