
மங்கையர் மலர் இதழில், 2017 ஆம் ஆண்டு, 'அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டிப் பார்க்கும் நோய்களில் முக்கியமானது மூட்டு வலி. வயதானவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி இந்தக் காலத்தில் இளம் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படுகிறது. நாளடைவில் பெரிய நோயாகவும் மாறக்கூடிய இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தினாலே போதுமானது. மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது? தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? முற்றிலும் குணமாகுமா? என்பதை விளக்குகிறார் அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் பாலமுருகன்.
"பெரும்பாலும் வயதான ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் இந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூட்டுகளுக்கு இடையே எண்ணெய் திரவம் போன்ற பொருள் இருக்கும். உடலிலுள்ள ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும்போது இந்த திரவம் முற்றிலும் அழிந்துவிடும். இதுவே மூட்டு வலி ஏற்படக் காரணம்.