
மங்கையர் மலர் இதழில், 2017 ஆம் ஆண்டு, 'அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
15 வயது முதல் 44 வயதுள்ள பெண்கள் பலரை இன்றைக்கு பயமுறுத்தும் விஷயம், நீர்க்கட்டி (PolyCystic Ovary Syndrome-PCOS). இந்த நீர்க்கட்டியானது குழந்தையின்மை பிரச்னையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. PCOS பிரச்னைக்கான அறிகுறிகள் என்னென்ன? இதைக் கண்டுபிடிப்பது எப்படி இதற்கான தீர்வு என்ன? என்பதை விளக்குகிறார் அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனையின் சித்தா டாக்டர் வெண்தாமரைச் செல்வி.
"மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவது, மாதவிடாய் வந்தால் தொடர்ந்து ஏற்படும் ரத்தப் போக்கு, முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்வது, அடிவயிறு மற்றும் பெண் குறியில் தொடர்ந்து வலி ஏற்படுவது, உடல் பருமன் போன்றவை நீர்க்கட்டி இருப்பதற்கான அறிகுறிகள். இளம் வயதிலேயே இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் திருமணமானதும் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.