
மங்கையர் மலர் இதழில், 2017 ஆம் ஆண்டு, 'அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
"பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான பிரச்னைகளுள் ஒன்று, வெள்ளைப்படுதல். தன்னைத் தானே கவனித்துக்கொண்டு, சுத்தமாக இருப்பது மட்டுமே இந்த பிரச்னைக்கான முதல் தீர்வாக இருக்கும்" என்கிறார் அறிஞர் அண்ணா அரசு யுனானி மருத்துவக் கல்லூரி இளநிலைப் பேராசிரியர் ஹபிபுல்லா.
வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது?
"வெள்ளைப்படுதல் என்பது சிலருக்கு இயல்பாகவே நடக்கும். வயதுக்கு வரும்போது, கர்ப்பமாவதற்கு முன்பு ஏற்படுவது இயல்பானதாகும். பயப்படத் தேவையில்லை. சிலருக்கு ஒருசில நோய் காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். இவைதான் சில சிக்கல்களை ஏற்படுத்தும். குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் பலவீனம், கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளுதல், இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் அணிவது, சுகாதாரக் குறைவு, வயிற்றில் பூச்சிகள், நீரிழிவு வியாதி, உடல் பருமன் போன்றவற்றால் வெள்ளைப் படுதல் ஏற்படுகிறது.