
மங்கையர் மலர் இதழில், 2017 ஆம் ஆண்டு, 'அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
''பெண்களுக்குப் பெரும்பாலும் மாதவிலக்கு நின்ற பிறகே சர்க்கரை நோய் வரும். இது Harmonal imbalance காரணமாக உண்டாகிறது" என்கிறார் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ (நிலைய மருத்துவ அலுவலர்) பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஜெயந்தி.
சர்க்கரை நோய் ஏன் வருகிறது?
''சர்க்கரை நோய் வர முக்கியக் காரணம் உடல் பருமன்தான். வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் அலுவலகப் பணிக்குத்தான் செல்கிறார்கள். அவர்களுக்கு உடல் உழைப்பு என்பதே கிடையாது. அதிக கலோரி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு நாம் உடற்பயிற்சி செய்யாவிட்டால் அதுவே உடல் எடையை அதிகமாக்கிவிடும். அரிசி உணவு, அசைவ உணவான சிக்கன் போன்றவற்றில் பூச்சிக் கொல்லிகள் ஏராளம் கலந்துள்ளன. இவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.