
மங்கையர் மலர் இதழில், 2017 ஆம் ஆண்டு, 'அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
"பல பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் அல்லாத நேரத்திலும் ரத்தப்போக்கு ஏற்படும். இதனைச் சாதாரண ரத்தப்போக்குதானே என்று விட்டுவிடுவதால், ரத்தச்சோகைக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, அதிகமான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்" என்கிறார், சென்னை அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை டாக்டர் ப்ரியா ஜான்.
காரணங்கள் என்ன?
அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையின் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டைத் தடுக்கலாம். 'காப்பர் டி பொருத்திக் கொண்டவர்களுக்கு மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.