ஈக்கள் தொல்லையா? அதை விரட்ட சில எளிய வழிகள்!

ஈக்கள் தொல்லையா? அதை விரட்ட சில எளிய வழிகள்!
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

* வீட்டில் ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு வைத்தால் ஈக்கள் பறந்து விடும்.

* தண்ணீரில் சிறிது சமையல் உப்பைக் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் வராது.

* சிறிதளவு வசம்பை நீர் விட்டு அரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் நெருங்காது.

* ஈக்கள் வரும் இடங்களில் கற்பூரத்தை பொடித்து, நல்லெண்ணெய் கலந்து தெளித்தால், ஈக்கள் நெருங்காது. இருந்தாலும் பறந்து விடும்.

* ஆரஞ்சு பழத்தோலை ஒரு துணியில் கட்டி, ஈக்கள் வரும் இடங்களில் வைத்தால், ஈக்களின்தொல்லை நீங்கும்.

* உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும். எரிச்சலூட்டும் ஈக்களை அகற்ற இக் கரைசலை தெளிக்கவும்.

* வீட்டை சுத்தம் செய்வதற்கு கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் வீட்டை சுற்றிலும் வைத்திருப்பதன் மூலம், ஈக்கள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com