நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணா?

வீட்டையும் அலுவலகத்தையும் ஒருசேர திறம்பட நிர்வகிக்க உதவும் சில ஆலோசனைகள்!
நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணா?

1. ஞாயிறன்றே அடுத்து வரும் ஒரு வாரமும் என்ன உடை உடுத்த வேண்டும் என்று தீர்மானித்து அவற்றை வீட்டில் அல்லது வெளியில் கொடுத்து அயன் செய்து வைத்துக் கொள்ளவும். அவற்றை பீரோவில் கிழமை வாரியாக அடுக்கி விடலாம். சனியன்று உடுத்துவதை அடியிலும் திங்கள் அன்று உடுத்துவதை மேலாகவும் வைக்கவும். காலை நேர பரபரப்பில் நிதானமாக உடை உடுத்திக் கொண்டு செல்லலாம்.

2. முதல் நாள் இரவே மறுநாள் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் என்ன சமைக்க வேண்டும் என்பதை  தீர்மானித்துக் கொண்டால் அடுத்த நாள் காலையில் சுறுசுறுப்பாக சமையலில் ஈடுபடலாம். 

3. காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடித்துவிட்டு அரிசி, பருப்பை நீரில் ஊறப் போட்டுவிட்டு ஒரு 15 நிமிடமோ அரை மணி நேரமோ யோகா/ வாக்கிங்/ எக்ஸர்சைஸ் செய்யலாம். அன்றைய நாள் முழுக்க உழைப்பதற்கான சக்தியை அது தரும்.

4.  ன் உமன் ஆர்மியாக எல்லா வேலையும் ஒற்றை ஆளாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல் வீட்டினருக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். பிள்ளைகளை தாங்கள் சாப்பிட்ட தட்டு, டம்ளர், மதியம் கொண்டு சென்ற டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்து வைக்கச் சொல்லுங்கள். வாட்டர் பாட்டிலில் நீர் நிரப்புவது, டிபன் டப்பாக்களை லஞ்ச் பேகுகளில் வைப்பது, வீடு பெருக்குவது போன்றவற்றை செய்யச் சொல்லுங்கள். மாமியார் காய்கறி, வெங்காயம் நறுக்கித தருவது, உலர்ந்த துணிகளை மடிப்பது, துவைத்த துணிகளை காயப்படுவது போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம். கணவர் வீடு துடைத்தல், துணிகளை இஸ்திரி செய்தல், பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்தல்,  போன்றவற்றை செய்யலாம். மாமனார் ஈ.பி பில் கட்டுவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்குவது போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம். தனிக்குடித்தனமாக இருந்தால் வசதிக்கேற்ப உதவிக்கு ஆள் வைத்துக் கொள்வது, அல்லது காய்கறி நறுக்க, சப்பாத்தி மாவு பிசைய ஸ்மார்ட் கிச்சன் டூல்ஸ் வாங்கி  பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. லுவலகம் செல்லும் முன்  காலை உணவை நிதானமாக உண்டு விட்டு செல்லவும்.  அலுவலகத்தில் சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, ஃபோனில் சமூக வலைதளங்களில் மூழ்குவது என்று நேரத்தை வீணாக்காமல் உண்மையாக உழைக்கவும். அலுவலக வேலைகளை பணி நேரத்திலேயே மிகுந்த கவனத்துடன் முடித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்து வந்து சிலவற்றை செய்யலாம் என்று நினைத்தால் இரட்டைச் சுமையாகி விடும்.

6. லுவலகத்தில் அனைவரிடமும் நட்புணர்வுடன் பழக வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்று அப்டேட்டடாக இருக்க வேண்டும். சக பணியாளர்களிடம் தோழமை உணர்வுடன் பழகினால் சூழ்நிலை இதமாக இருக்கும். யாருடனும் யாரைப் பற்றியும் புறம் பேசுவது குறை சொல்வது என்று இல்லாமல் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிம்மதியான மனநிலையில் தன் அமைதியாக, ஆற்றலுடன் வேலை செய்ய முடியும். 

7. லுவலகத்தில் தேவையில்லாமல் பிறர் உங்களை சீண்டினாலோ ஆண் அதிகாரிகள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டாலோ கொஞ்சம் கூட தயங்காமல் மேல் அதிகாரிகளிடம் அவர்களை பற்றி புகார் செய்துவிடலாம். இதில் எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு கீழே பணிபுரியும் நபர்களிடம் அதிகாரத்தை காட்டாமல் அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்து அன்புடன் நடத்தினால் உங்களுக்கு நன்றாக ஒத்துழைப்பு தருவார்கள். நீங்களும் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். 

8. லுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் நேராக அடுக்களைக்குள் நுழையாமல் முகம் கழுவி அல்லது குளித்துவிட்டு பத்து நிமிடம்  ரிலாக்ஸ்டாக பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். பள்ளியில் கல்லூரியில் நடந்தவற்றை காது கொடுத்துக் கேளுங்கள். ஒரு பத்து நிமிடம் பூஜை அறையில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யலாம். மாலை நேரத்தை அமைதியாக எதிர் கொள்ள இது உதவும் .

9. ரவு நேரத்தில் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரே வகை டிபன் அல்லது சமையலை தீர்மானிக்கலாம். பிள்ளை களுக்கு தனியாக பிரட் ஆம்லெட். கணவருக்கு மசால் தோசை. மாமியாருக்கு கோதுமை உப்புமா என்று பல தினுசு செய்து சோர்ந்து போக வேண்டாம். அவற்றை லீவு நாட்களில் வைத்துக் கொள்ளலாம்.

10. ரவு உணவை  குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும். பின் பிள்ளைகளுக்கு கதை சொல்லி தூங்க வைக்கலாம். கணவருடன் கண்டிப்பாக பத்து  நிமிடங்களாவது அன்றைய நிகழ்வை கேட்டும் உங்களுடைய நிகழ்வை சொல்லியும் மனம் விட்டு பேச வேண்டும்.  மாமியாரோ கணவரோ உதவ பத்திரங்களை இரவே தேய்த்து கழுவி அடுக்கி விட்டு, அடுப்படியையும் துடைத்து விட்டால் அடுத்த நாள் காலையில் சமையல் அறைக்கு செல்லும் போது சுத்தமான சமையலறை உங்களை வரவேற்கும். உற்சாக மனதுடன் அன்றைய வேலையைத் தொடங்குவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com