டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்,நரம்பியல் நிபுணர் சந்திப்பு: பத்மினி பட்டாபிராமன் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” நெகிழ்வான இந்தப் பாடலைக் கேட்ட உடன், ரஜனிகாந்த் தன் தாயைத் தூக்கி வரும் காட்சியும், அந்த அம்மாவுக்கு கைகள் மடங்கி, உடலில் நடுக்கம் இருப்பதும் நினைவுக்கு வருகிறதல்லவா? பார்கின்சன்ஸ் நோய்க்கான அறிகுறி களைத்தான் அங்கு காண்கிறோம். பெரும்பாலும், 60 வயதுக்கு மேற்பட்டோரிடம் காணப்படுவது பார்கின்சன்ஸ் என்னும் நரம்பியல் பாதிப்பு. (common neurodegenerative disorder). இதற்கான அறிகுறிகள் என்ன டாக்டர்?உடல் இயக்கங்களில் சரிவர இயங்க முடியாமல் இறுக்கம் (Rigidity) செயல்களில் தாமதம், நிலை தடுமாற்றம் (impaired balance) இவையெல்லாம் வழக்கமான சாதாரண அறிகுறிகள் இருந்தால் அச்சப்படத் தேவையே இல்லை. மருத்துவரை அணுகி, தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். முதலில் உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில்தான் லேசாக ஆரம்பிக்கும்..எந்த உறுப்புக்களை எப்படியெல்லாம் தாக்குகிறது?கைகால் விரல்கள், முகவாய், தலை இவற்றில் ஏற்படும் நடுக்கம். ட்ரெமர் (Tremors) பாதிக்கப்பட்டவருக்கு களைப்பு, உணர்ச்சி வசப்படுதல், மன அழுத்தம் இவை அதிகம் ஆகும்போது ட்ரெமரின் பாதிப்பும் அதிகமாக இருக்கும். இதன் வகைகள் பலவிதம்.இறுக்கம் Rigidity கைகால்கள் மற்றும் உடலில் இறுக்கம் போலத் தோன்றும் உணர்வால், தசைகளில் வலி வரலாம். ப்ராடிகென்சியா (Bradykinesia) ஏதோ நாட்டின் பெயர் போல இருக்கிறதே டாக்டர்..?(சிரித்தபடி தொடர்கிறார் டாக்டர் புவனா ராஜேந்திரன்) தானாகவே இயங்கக்கூடிய (Involuntary) உடல் உறுப்புக்களைப் பாதிப்பது இந்த வகை. செயல்களில் தாமதமான மந்த நிலை வரலாம். சிலருக்கு முகத்தைப் பாதிக்கலாம். சரியாக நிற்க முடியாமல் இருத்தலும், (Postural instability), நேராக நிற்க உட்கார இயலாமையும் ஏற்படக்கூடும். சிறு வயதிலிருந்தே சரியாக உடற்பயிற்சி செய்துவந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. பார்கின்சன் கெயிட் (Parkinsonian gait)நடக்கும்போது பேலன்ஸ் இல்லாமல் வளைந்த தோற்றத்தில், நடப்பதுபோல் இருக்கும். அப்போது ஏற்படும் கை அசைவுகள் சரியாக இருக்காது. இதுவுமே உடற்பயிற்சி ரெகுலராக செய்பவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவுதான். எதனால் பார்கின்சன்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது டாக்டர்?மூளையின் முக்கியமான இரண்டு பகுதிகள், substantia nigra மற்றும் corpus striatum. இவை இரண்டுக்கும் நடுவில் தூதுவன்போல் செயல்படுவது டோபமின் (Dopamine) என்னும் வேதியியல் பொருள். இதுதான் நம் எளிதான உடல் அசைவுகளுக்கு காரணமாக இருப்பது. இந்த டோபமின் சுரக்கும் செல்கள் குறையும்போது, இரண்டு பகுதிகளுக்கும் இடையே தொடர்பு பாதிக்கப்படுவதால், பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. டோபமின் அளவு குறையக் குறைய பாதிப்புக்களும் அதிகம் இருக்கும்,மூளையின் மற்ற செல்களும் சில நேரம் இத்தகைய பாதிப்புக்குக் காரணமாகலாம். வயதானால் ஏன் டோபமின் அளவு குறைகிறது?இதுவரை நடந்து வரும் ஆராய்ச்சிகளின்படி, பரம்பரை காரணங்கள், மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பு, வாழ்க்கை முறை போன்றவை டோபமின் சுரப்பினைக் குறைக்கும் காரணங்களாக இருக்கின்றன..பார்கின்சன் பாரம்பரியமாக வரக்கூடிய பாதிப்பா டாக்டர்?பெரும்பாலும் இது காரணம் கண்டறிய முடியாத பாதிப்பு (Idiopathic). அவ்வப்போது திடீரென வரக்கூடியது. இருந்தாலும் பாரம்பரியமாக சில மரபணுக்கள் இந்தப் பாதிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று தொடர்ந்து நடந்துவரும் ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. மரபணுக்கள் ஆய்வின் மூலம் இன்னும் நவீனமான சிகிச்சைகள் தரும் வாய்ப்பு உருவாகும். யார் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? சிறு வயதினருக்கு வருமா?பொதுவாக பெண்களைவிட ஆண்கள் சுமார் இரண்டு மடங்கு வரை பாதிப்புக்குள்ளாகிறார்கள். பரம்பரை காரணமாக மிகச் சிலர் இள வயதில் பாதிக்கப்படலாம். மற்றபடி இள வயதினருக்கு அனேகமாக வருவதில்லை. பூச்சிமருந்து போன்ற நச்சுப் பொருட்களைக் கையாள்வோர், தலையில் பிரச்னை (Head Trauma) உள்ளவர்கள் இவர்களுக்கும் பார்கின்சன் வர வாய்ப்பு உண்டு. இதனை எப்படி டயக்னைஸ் செய்கிறீர்கள் டாக்டர்?ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், தரமான வாழ்க்கையைத் தொடர முடியும். உடல் அசைவுகளின் ஒழுங்கின்மை குறித்து ஒரு நரம்பியல் மருத்துவரால் உடனே அறிய முடியும். பரம்பரையில் இருந்திருந்தால், அதற்காகச் செய்யப்பட்ட சிகிச்சை என்ன என்பதை முதலில் சோதனை செய்கிறோம். நச்சுப் பொருட்கள், தலைவலி போன்ற பிரச்னைகள், இவற்றைக் கேட்டபின் உடல் அசைவுகளைச் சோதிக்கிறோம். காரணத்தைக் கண்டறிந்தபின், தகுந்த சிகிச்சை தரப் படுகிறது. முற்றிலும் இதைக் குணப்படுத்த முடியாது என்றாலும், பலவித தெரபிகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.லெவோடோபா தெரபி மூலம் மூளைக்குள் டோபமின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும், அது அதிக நேரம் வேலை செய்யவும், மூளையில் மோட்டார் நரம்புகள் செயல்படும் சிஸ்டத்தை மேம்படுத்தவும் மருந்துகள் தரப்படுகின்றன.இதில் வலி, ஹாலூசினேஷன் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால், அதைக் குறைக்கவும் சிகிச்சைகள் உள்ளன. தீவிரமாக பாதிப்பு உள்ளவர்களுக்கு, (Deep brain stimulation (DBS) என்னும் அறுவைச் சிகிச்சை செய்யப் படுகிறது. அசைவுகளைக் கன்ட்ரோல் செய்யும் மூளைப் பகுதியில் எலெக்ட்ரோட்கள் வைக்கப்படும்.அல்லது சில அறுவைச் சிகிச்சைகளில் பார்கின்சன் உண்டு பண்ணும் செல்கள் அழிக்கப்படும். தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள் மூலம் டோபமின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆராய்ச்சிகள், இவை மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. இந்த நோய் எப்போது முதலில் கண்டறியப்பட்டது டாக்டர்?சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே (5000 BC) வாழ்ந்த இந்திய மக்களிடையே இதைப் பற்றிய குறிப்பும், அதற்கான மருந்துகளும் சொல்லப்பட்டிருக்கிறது.1817ல் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர், ஜேம்ஸ் பார்கின்சன், இந்த நோயைப் பற்றி விவரித்து, ஷேக்கிங் பால்சி (Shaking paisy) என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது பெயரால்தான் இந்தப் பாதிப்பு இன்று அழைக்கப் படுகிறது. இந்த நோய் உயிருக்கு அச்சுறுத்தலா?பார்க்கின்சன் பாதிப்பு வந்தவர்களில் அதன் தாக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலர், பாதிப்பு இருந்தாலும் நல்லபடி நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்.சிலருக்கு உடல் இயக்கம் விரைவில் கட்டுப்பாடு இல்லாமல் பாதிக்கப்பட்டுவிடும். பொதுவாக பார்க்கின்சன் பாதிப்பு ஏற்பட்டவர்களின் வாழ் நாள் நீட்சி, மற்றவர்களைப் போல நார்மலாகத்தான் இருக்கும்.