ராணி நடுத்தர வர்க்கம். ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார். இன்று எல்லோருக்கும் விடிந்தது போலவே அவருக்கும் விடிந்தது. காலை டிஃபன் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு மொபைலில் வந்தது. எடுத்து பேசினார். பேசியவர் பெரும் சத்தத்துடன் மிரட்டி பேசினார்.
ஆம்.
ராணிக்கு தாய்லாந்திலிருந்து ஒர பார்சல் வந்து உள்ளது என்று சொன்னார். பிறகு, "அந்த பார்சலில் 'மெத்தபெடின்' போதை பொருள் வந்து உள்ளது. நீங்கள் நான் சொல்லும் வங்கி கணக்கில் ரூபாய் 5,00,000 உடனே செலுத்த வேண்டும்" என்று சொன்னான்.
"ராணி தனக்கு தாய்லாந்தில் யாரையும் தெரியாது.. எனவே எனக்கு பார்சல் வர வாய்ப்பு இல்லை," என்று ஆணித்தரமாக சொன்னார். பேசியவர் கோபம் அடைந்தார்.