பரங்கியின் அருமை!

ஆரோக்கியம்
 பரங்கியின் அருமை!
Published on

ம்ம நாட்டுல பரங்கிப் பழம் எளிதாக கிடைக்கும் அதற்கு இங்கு மதிப்பு இல்லை. நாம் பாதம், பிஸ்தானு பெரும் முதலாளிகள் விளம்பரங்கள் செய்து விற்பனை செய்வதை கௌரவமாக வாங்கி சாப்பிட்டு வருகிறோம் .

நான் கொஞ்சம் ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன் அரபு நாடுகளில் பணி செய்த அனுபவம் உண்டு அங்கு குழந்தை இன்மை பிரச்னை மிகக் குறைவு , அங்கு முழுக்க முழுக்க சுகப்பிரசவம் தான் ஆகுது. அரேபியர்கள் வீடுகளில் அடுத்த அடுத்த உயரங்களில் குழந்தைகள் இருப்பார்கள். அந்த பிள்ளைகளை வளர்க்க நம் நாடுகளில் இருந்து நிறைய பெண்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள் . அரேபிய தம்பதிகளுக்கு வேலையே அடுத்த அடுத்து குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டும்தான்.

இங்கு நம்ம நாட்டுல ஒரு குழந்தை பெற்று எடுக்க லட்சம், கோடினு செலவு பண்றோம் . இதற்கு காரணம், நாம் மாறிய அந்நிய வாழ்க்கை முறைதான்.

நம்ம நாட்டுல நாம் வீட்டுக்கு அருகில் சுலபமாகக் கிடைக்க கூடிய பரங்கிப் பழ விதைகளை குப்பையில் தூக்கி எறிந்து விடுகிறோம். நாம் தூக்கி வீசும் இதன் விதைகள்தான் அரேபியர்கள் கைகளில் எப்போதும் இருக்கும். அரேபியர்கள் இல்லற வாழ்வில் முழு நிறைவோடு வாழ முதற் காரணம் நம் ஊர் பரங்கி விதைகள்.

இந்த பரங்கிப் பழங்களை நாம் குப்பையில் தூக்கி எறிவோம், அல்லது கோயில் அன்னதானம் செய்ய வழங்குவோம். இந்த பரங்கி பழ விதைகள் விலை மதிப்பு மிகுந்தது. இதை நான் நம் ஊரில் மக்கள் அதிகம் செலவு செய்யும் அதிகப்படியான helth centre, weight loss மையங்களில்தான் பார்க்கிறேன்.

நம் ஊர் பணக்கார பெண்களுக்கு பரங்கிப் பழமே தெரியாது. பரங்கி விதை எப்படி தெரியும். இப்ப organic foods, பாரம்பரிய உணவு வகைகள் தற்போது பணக்காரர்கள் உணவாக மாறி இருக்கிறது.

பரங்கி விதைகளை நாம் தொடர்ந்து உண்டு வரும் போது புகை பழக்கம், மது பழக்கம் வேகமாக மறந்து போகும் உடல் மற்றும் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பரங்கிப் பழம் நம்ம ஊரில் சும்மாவே கிடைக்கும். அப்படி கிடைத்தால் அந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் கூட அதன் விதைகளை எடுத்து காயவைத்து எடுத்து வையுங்கள். ஒரு முறை அந்த விதைகளை உங்கள் வாய்மென்று விட்டால் அடுத்து அடுத்து அந்த விதை உங்களை உண்ணத் தூண்டும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com