உங்க வீட்ல ப்ரேக்பாஸ்டுக்கு தினமும் பிரெட் டோஸ்ட் தானா? அப்படின்னா இதை தெரிஞ்சிகோங்க பிரெட்டை முறுகலாக டோஸ்ட் பண்ணும் போது கோதுமையில் உள்ள புரோட்டினின் குவாலிட்டியும் , புரோட்டினின் ஜீரணமாகும் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடுதாம். புரோட்டின் குவாலிட்டி குறைவதால் பிரெட் டோஸ்ட் செய்யும் போது அதில் இருக்கும் அக்ரில்அமைடு என்று சொல்லப்படும் பாஸிபில் கார்சினோஜனின் அளவு கூடுகிறது, ப்ரெட் டோஸ்ட்டில் இந்த கார்சினோஜனின் அளவு மிக மிகக் குறைவு தான் ,அதற்காக தொடர்ந்து பிரெட் டோஸ்ட் சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் வரக் கூடும் என்றெல்லாம் பயப்படத் தேவை இல்லை, இனி மேல் பிரெட் டோஸ்ட் செய்யும் போது பிரவுன் நிறத்தில் முறுக விடாமல் அளவான சூட்டில் பிரெட்டை வெளியில் எடுத்து சாப்பிடத் தொடங்குங்கள். இதனால் புரோட்டினின் குவாலிட்டியும் குறையாது அக்ரில்அமைடு கூடும் என்ற வீண் பயத்திற்கும் இடமில்லை. முறுகலாக சாப்பிடுகிறேன் என்று உயிரோடு விளையாடக் கூடாதில்லையா!
சில வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் நல மருத்துவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் தெரிவித்த தகவலும் இதனுடன் சற்று ஒத்துப் போவதாகவே இருக்கிறது. அவர் சொன்னது; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு பிரெட், பன் போன்றவைகளைக் கொடுப்பதாக இருந்தால் பிரெட்டின் அடிப்புறத்தில் சற்றே தீய்ந்த பிரவுன் நிறப்பகுதிகள் மற்றும் பிரெட் ஓரங்களை நறுக்கி அப்புறப்படுத்தி விட்டுப் பிறகு தான் குழந்தைகளுக்கு சாப்பிடத் தரவேண்டும் என்றார். மேற்கண்ட பாஸிபில் கார்சினோஜன் பிரச்சனை தான் இதற்கும் காரணம். பிரெட் அடிப்பகுதி மற்றும் ஓரங்களின் அடர் பிரவுன் நிறத்திற்கு காரணம் என்ன? அதிகப்படியான சூட்டைத் தாங்கி முறுகத் தொடங்குதல் தான் இல்லையா? எனவே பிரெட் சாப்பிடும் போதெல்லாம் இதை நினைவுறுத்திக் கொள்வது நல்லது.