பைகுலா விலங்கியல் பூங்காவில் பெயர் சூட்டும் நிகழ்வு!

மும்பை பர-பர
பைகுலா விலங்கியல் பூங்காவில்  பெயர் சூட்டும் நிகழ்வு!
Published on

2018ம் ஆண்டு தென்கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள கோக்ஸ் அக்வேரியத்திலிருந்து 8 பென்குயின் பறவைகள் (5 பெண், 3 ஆண்) விலை கொடுத்து வாங்கப்பட்டு, பைகுலா (மும்பை) விலங்கியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. தற்போது 8 இல் ஒன்று இறந்துவிட்டது.

சமீபத்தில் டொனால்டு – டெய்சி பென்குயின் ஜோடிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குஞ்சுகளும், மோல்ட் – பிலிப்பா ஜோடிக்கு ஒரு ஆண் குஞ்சும் பிறந்துள்ளன. ‘ஃபிளாஷ்’, ‘பிங்கோ’ என்று ஆண் குஞ்சுகளுக்கும், ‘அலெக்சா’ என்று பெண் குஞ்சிற்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்த விலங்கியல் பூங்காவின் தற்சமய வயது 160.

மும்பை பர-பர

இரவு 7 மணிக்கு...

ரவு 7 மணிக்கு என்ன? மும்பை, பாந்த்ரா, ஹில்ரோடு பகுதியில் லைசென்ஸ் இல்லாத நடைபாதை மற்றும் ரோட்டோர கடைகள் அதிகம். கால் வைத்து நடக்க இடம் கிடைக்காது. மக்கள் கூட்டம் அலைமோதும்.

பலர் அளித்த புகாரின் பேரில் முனிசிபல் கார்ப்பரேஷன் வேன் (ஆக்கிரமிப்புக்கு எதிராக) பகல் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட, கடைகள் காணாமல் போயின. ஆனால், அந்த வேன் இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற பின், புற்றீசல் போல எங்கிருந்தோ மடமடவென நடைபாதைக் கடைகள் வந்து முளைத்து விடுகின்றன. இரவு 12 மணி வரை ஜே-ஜேயென இயங்குகின்றன. இங்கு கிடைக்காத சாமான்களே கிடையாதுன்னா பர்த்துக்குங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com