‘கடவுளின் தீவு’ பாலி - சுற்றுலா பயண அனுபவம்!

பாகம் 2
‘கடவுளின் தீவு’ பாலி 
- சுற்றுலா பயண அனுபவம்!

நான்காம் நாள்

1.TanahLot... கோயில் தண்ணீரை கடந்தபடியே கோயிலுக்கு செல்லுதல். அங்கங்கே அழகழகாய் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற குருவிக்கூடு, இதய வடிவிலான இடம் இப்படி நிறைய...

2.Bali Handara Gate அருமையான இயற்கை எழில் கொஞ்சும் வியூ பாயிண்ட்… தேனிலவுக்கு வந்த தம்பதிகள் பலரும் அழகழகாய் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தனியே கட்டணம்.

ஐந்தாம் நாள்

1 Kintamani Volcano

எரிமலையில் இருந்து எரிமலை மற்றும் சாம்பல் வெளியேறுவதை பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்த்தோம். இதுவரை பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்திருந்ததை நேரில் பார்த்தபோது மனம் குதூகலித்தது.

2.Tegenungan Water Fall இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் கண்டிப்பாக சொர்க்கத்தை காணலாம். இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையே கவிதை போல் இருக்கிறது. சுத்தமான காற்று நாசியை தீண்டுகிறது. நீர்வீழ்ச்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இங்கும் பாலி ஊஞ்சல் இருக்கிறது. நீர் அதிக ஆழமில்லை.

3.Tegallalang மாடி நெல் வயல்கள்

பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி. மூங்கில் வேயப்பட்ட அழகழகான குருவிக்கூடுகள் நிறைய உள்ளன. புகைப்படம் எடுத்துக்கொள்ள பெஸ்ட் ஸ்பாட்!

4.Goa Gajah

குகைகளில் பிள்ளையாரும் சிவனும் காட்சியளிக்கிறார்கள். நாம் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்வதுபோல் இங்குள்ள  பெண்கள் அரிசி மாவில் குட்டி குட்டியாய் அழகாய் பூக்களைச்செய்து எண்ணெயில் பொறித்து நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கிறார்கள். அது ஒரு பெரிய ப்ராசஸாக நடக்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

5. Coffee plantation

மிகப்பெரிய காபி தோட்டம். இங்கு வளரும் காபிபெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மர நாய்கள் சாப்பிட்டு அதனுடைய கழிவுகள் கொட்டைகளாக வெளியே வர அவற்றை சுடுநீரில் நன்கு கழுவி தோலை உரித்து, வாணலியில் வறுத்து உரலில் போட்டு பொடி செய்கிறார்கள். துவர்ப்பு கலந்த சுவையாக இருக்கிறது இந்த காபி .

நம் இந்திய மதிப்பில் ஒரு கப் காபி 300 ரூபாய். பெரும்பாலும் இந்த காபித்தூள் ரஷ்யாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

உணவகங்களில் பெரும்பாலும் அரிசி உணவுகள் கிடைக்கின்றன. இறைச்சி வகைகளில் கோழி, மீன், பன்றி இறைச்சி கிடைக்கிறது.

சாப்பாடு ஒன்றும் பெரிய கஷ்டமாக இல்லை. நிறைய இந்தியன் ரெஸ்டாரண்டுகள் உள்ளன. அங்கு சப்பாத்தி பூரி ருமாலியன் ரொட்டி, சைட் டிஷ், புலாவ் ஃபிரைட் ரைஸ் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

பெரும்பாலான உணவகங்களில் அழகழகான பெண்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகின்றனர். அழகான பெண்கள். அழகான நடனம்!

கிருஷ்ணா ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை உள்ளது. இங்கு எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கின்றன. நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இங்கே ஒரே இடத்திலேயே வாங்கிக்கொள்ளலாம்.

மொத்தத்தில் ஐந்து நாள் சுற்றுலா பயணம் ஐந்து மணி நேரத்தில் கரைந்தே போனது போன்ற உணர்வு. அத்தனை அற்புதமான அனுபவம்.

பாலி சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பு மற்றும் கடற்கரைகள். கனவுத்தீவான பாலிக்கு வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டுமென திட்டமிடுங்கள்..

பி.கு: சொல்ல மறந்தேனே.. கண்டிப்பாக விமானம் தரை இறங்கியவுடனும், பயணம் முடியும் தருவாயிலும்... அரோமா மசாஜ்... அதிலும் குறிப்பாக ஃபுட் மசாஜ்... செய்துகொள்ளுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com