
சமையல் செய்யும் போது வாசனைக்காக லவங்கப்பட்டை சேர்ப்பார்கள். பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்திலும் தற்போது பட்டை, கிராம்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் நாம் உணவில் தாளிப்புக்காக மட்டும் தானே அதன் பயன்படுத்துகிறோம். சாப்பிடும்போதும் அதை எடுத்து வைத்துவிடுகிறோம். உண்மையிலேயே லவங்கபட்டையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் அதை ஒதுக்கமாட்டீங்க.
லவங்கப்பட்டை மெட்டா பாலிசத்தை அதிகரிக்க பயன்படுகிற மருந்து பொருளாகும். அதில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1. பாக்டீரியா எதிர்ப்பு லவங்கப்பட்டையில் சின்னமால் டிஹைடு உள்ளதால் நோய் தொற்றுக்களை எதிர்க்க உதவுகிறது.
2. ஆண்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது செல்களை பாதிப்பில் இருந்து காக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயையும் தடுக்கிறது.
3. அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
4. டைப் 2 டயாபெட்டீஸை நிர்வகிக்க உதவுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
5. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
6. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
7. புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
8. முகப்பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
9. அல்சைமர் மற்றும் பர்கின்சன் நோயை தடுக்க உதவுகிறது.
10. லவங்கப்பட்டை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூட்டு வலியை சரி செய்யவும் உதவுகிறது.