செல்ஃபோன் பயன்பாடு – எச்சரிக்கை

விழிப்புணர்வு
செல்ஃபோன் பயன்பாடு – எச்சரிக்கை
Published on

ரம்பத்தில் பிறரை தொடர்பு கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த அரிய வகை கருவியை போலீஸ் துறையில் உள்ள கிரைம் பிராஞ்ச் பிரிவினர் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தினார்கள். மற்றவர்கள்...? 

செல்போனை பயன்படுத்த எங்க வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியுமே என்கிறீர்களா? பரவாயில்லை;. தொழில் நுட்ப வளர்ச்சியின் அடையாளமான இந்த அற்புதமான சாதனத்தை முறையாகப் பயன்படுத்தி நல்ல முறையில் வாழ்பவர், வாழ்வில் முன்னேறியவர்கள் ஏராளம். எப்பொழுதும் செல்போன் மகிழ்ச்சியை அளிக்க சின்ன சின்ன தீர்வுகள் இதோ:

தொடர்ந்து மணி கணக்கில் பேசுவதை தவிர்க்கவும். முடிந்தவரை ஐந்து நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொள்ளலாம். 

முக்கிய செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்ளலாம். அதிக நேரம் பேச அவசியப்பட்டால் ஹெட் செட் பயன்படுத்துவோம். 

உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு செல்போனை பயன்படுத்த வேண்டாம். மனம் அமைதி அடைந்து ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இதுவே வழியாகும். 

கையிலும், காதிலும் அதை வைத்துக்கொண்டு பொன் போன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள். 

எல்லா நேரமும் செல்போனை தூண்டிக் கொண்டிருப் பவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக இதனை பயன்படுத்துவதால் கை, கழுத்து, காது, கண் போன்றவற்றில் வலி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் வைத்து அழுத்திக்கொண்டு மற்ற வேலைகளில் ஈடுபடுவதால் மூளையில் சுறுசுறுப்பு குறைந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் கழுத்தில் வலி ஏற்பட்டு, கழுத்து எலும்புகள் தே ய்ந்து விடும் அபாயம் உள்ளதாம். கையை தொடர்ந்து ஒரே நிலையில் வைத்திருப்பதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

கண்ணில் வலியும் கோளாறும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  பேசிக்கொண்டே இருப்பதால் காதில் உள்ள மெல்லிய ஒலி உணர்வு செல்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதுடன் அதிலிருந்து  வெளிவரும் கதிர்வீச்சால் மூளையும், இதயமும் பாதிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

வெட்டியாக பொழுதுபோக்குக்கு செல்போனை பயன்படுத்துவதால் வேறு விதமான தீமைகள் ஏற்படு வதையும் கவனிக்க வேண்டும். அவை வாழ்வியல் நடைமுறை சிக்கல்கள் என்ற பல கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பின்னணியில் இருப்பது செல்போன் தான்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச வேண்டாம். போன் எண்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். இத்தகைய விபரீதங்களால் ஏராளமான பாவிகளின் வாழ்க்கை தடம் புரண்டு சீரழிந்து போனதை நாம் கண் திறந்து பார்க்க வேண்டும். 

செல்போன் டவர்களின் தவிர்வீச்சால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உடல் பாதிப்புகள் ஏற்படுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் செல்லில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். காதிலும், மூளையிலும் கட்டிகள் ஏற்படும். சிந்தனைத்திறனும், நினைவாற்றலும் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். எனவே இரண்டு நிமிடங்களுக்கு மேல் செல்லில் பேசுவதை தவிர்க்கவும். அவசியம் ஆனால் வீட்டுக்குப் போய் நிதானமாக பேசிக்கொள்ளலாம். சாதாரண தொலைபேசியிலும் பேசிக்கொள்ளலாம். மேலும் சார்ஜ் செய்யும் போதும் பேச வேண்டாம் என்று கூறுகிறார்.

காவல்துறை உயர் அதிகாரி கூறுவது :

செல் வாங்கும்போது காரண்டி கார்டு, பில்லுடன் வாங்கி என்னைக் குறித்து வைக்கவும்.

போன் காணாமல் போனால் உடனே அந்த எண்ணை செயல் இழக்க செய்ய வேண்டும். தவறினால் சிக்கல் வரக்கூடும்.

தெரியாத நபர்களிடம் ஃபோனை கொடுக்கவே வேண்டாம். 

செல்லை ரிப்பேர் செய்ய தரும்போது சிம் கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செல்போன் குற்றங்களுக்கு 506,507 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. 

பாலியல் மருத்துவ நிபுணர் கூறுகிறார்:

செல்ஃபோனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து மலட்டுத் தன்மை உண்டாவதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

24 மணி நேரமும் செல்போன் போதையில் விழுந்து கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மனநல மருத்துவர் கூறுகிறார். 

செல்போனில் படம் எடுத்து, பெண்களை கொடுமைப் படுத்தி வருகிற மோசமான கும்பல் இருக்கிறது ஜாக்கிரதை! 

கோல்ட் பிஷ் மெமரி எனும் அவசர நேரத்தில் முக்கியமான போன் நம்பர்கள் கூட மறந்து போகும் அளவுக்கு பெரும் பாலான செல் பிரியர்களின் நிலை- ஞாபக சக்தி வெகுவாக குறைந்துவிடும் நிலைமைக்கு போய் விட்டதாக இங்கிலாந்து ஆய்வு எச்சரிக்கிறது.

ஆதலால் செல்போனை சரியானபடி உபயோகித்து பல்வேறு நன்மைகளை அடைவோமாக ! 

-இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com