
இன்றைக்கு மக்களின் ரசனைகளும் வாழ்க்கை முறைகளும் மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக மாறிப்போன சூழ்நிலையில் முற்றிலும் காஸ்மெடிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் புறக்கணித்தால் நம்மை யாரும் உச்சி முகர்ந்து புகழ்ந்து விடப் போவதில்லை போதாக் குறைக்கு பழம் பஞ்சாங்கம்,கர்நாடகம் என்ற பட்டப் பெயர் தான் மிஞ்சும்.
சரி காஸ்மெட்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது,பயன்படுத்தினாலும் அவற்றால் அலர்ஜி மற்றும் ஆரோக்யக் கேடு! இப்போது என்ன தான் செய்வது என்று குழம்பிப் போகிறீர்களா?!கவலையை விடுங்கள் உணவு,மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான வரம்புகளை நிர்ணயிக்கும் துறை உடல் நலத்தில் கெடுதலான விளைவுகளை உண்டாக்கும் மோசமான 16 கெமிக்கல்களை (வேதிப் பொருட்களை) Dirty Sixteens என்ற பெயரில் பட்டியலிட்டுள்ளது.
அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பில் மூலப் பொருட்களுக்கான பட்டியலில் பயன்படுத்தப் பட்டிருக்கும் வேதிப் பொருட்களைப் பற்றி முழுமையான விவரங்கள் அளிக்கப் பட வேண்டும் என்பது விதி. அந்த விதிகளின் படி நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களின் லேபிளில் இந்த 16 பொருட்களில் எது ஒன்று இடம் பெற்றிருந்தாலும் தயக்கமின்றி அந்த காஸ்மெடிக் பொருளை நாம் வாங்காமல் புறக்கணித்து விடலாம்.
அந்த 16 வேதிப்பொருட்கள் என்னென்ன என்று பாருங்கள்;
1. பியூட்டைல் அசிடேட் - நெயில் பாலிஷ் நெடு நாட்களுக்கு உதிராமல் இருக்க சேர்க்கப் படுகிறது .
2. பியூடலேட் ஹைட்ராக்சி டொலுவீன் -காஸ்மெடிக் பொருட்கள் வெகு சீக்கிரத்தில் நிறம்மாறாமல் இருக்க சேர்க்கப் படுகிறது.
3. நிலக்கரி தார் -சருமத்தின் இறந்த செல்களை கரைப்பதற்கும் ,சாம்பு மற்றும் ஹேர் டை பயன்படுத்தும் போது சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு அரிப்பெடுக்காமல் கட்டுப்படுத்தவும் இது காஸ்மெடிக் தயாரிப்பில் சேர்க்கப் படுகிறது .
4. கோக்கமைட் /லார மைட் DEA -சோப் மற்றும் ஷாம்பூவில் அதிகமாக நுரை வர வைக்க இந்த வேதிப் பொருள் சேர்க்கப் படுகிறது .
5. ஃபார்மால்டிஹைட் -டியோடரன்ட்டுகள்,நெயில் பாலிஷ்கள்,சோப்,,ஷாம்பூ,மற்றும் சேவிங் கிரீம்களில் கிருமிநாசினியாகவும்,பிரிசர்வேடிவ் ஆகவும் இந்த வேதிப் பொருள் சேர்க்கப் படுகிறது.
6. டை அஷோலினிடைல் யூரியா- கிருமிநாசினிகள் வேலையை ஊக்குவிக்க இந்த வேதிப் பொருள் பயன்படுத்தப் படுகிறது.
7. எத்தில் அசிடேட் -நெயில் பாலிஷ்,மஸ்காரா,டூத் வைட்டனர்கள் மற்றும் பெர்ஃபியூம்கள் போன்றவற்றின் திரவ நிலை கெடாமல் நீடிக்க சேர்க்கப் படுகிறது.
8. பாரபின்ஸ் - காஸ்மெடிக் பொருட்களில் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கக் கூடிய கூட்டு வேதிப் பொருளுக்கு பாரபின்கள் என்று பெயர்.
9. பெட்ரோலியம்-லிப்ஸ்டிக்குகள் பளீரிடவும்,க்ரீம்களின் மென்மைத் தன்மை நீடிக்கவும்,,சருமத்தின் மென்மை நீடிக்கவும் பெட்ரோலியம் சேர்க்கப் படுகிறது.
10. ட்ரை எத்தனாலமைன் - லோஷன் கல் ,சேவிங் கிரீம்கள்,சோப்,ஷாம்பூ வகைகள் குறிப்பிட்ட வடிவத்தில் அமைய சேர்க்கப் படுகிறது.
11. ட்ரைக்லோசன்-பயன்படுத்துபவர்களின் கைகளில் இருந்து பரவும் பாக்டீரியாக்கள் காஸ்மெடிக் பொருட்களின் உள்ளே ஊடுருவாமல் இருக்க சேர்க்கப் படுகிறது.
12. டொலுவீன் -நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் டை போன்றவற்றின் திரவத் தன்மை கெடாது நகம்,மற்றும் கூந்தலில் அவற்றின் ஓட்டும் தன்மையை நீடிக்கச் செய்து பல பளப்பான தோற்றம் தர வைக்க டொலுவீன் எனும் கெமிக்கல் காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுகிறது.
13. டால்க் -ஐ ஷேடோ,ப்ளஷ்,டியோடரண்ட் ,பவுடர் போன்றவற்றில் ஈரப் பதத்தை உறிஞ்சவும்,காஸ்மெடிக் கண்டேயினர்களில் அவை ஒட்டிக் கொள்ளாது இருக்கவும் டால்க் சேர்க்கப் படுகிறது.
14. சோடியம் லாரேட் சல்ஃபேட் -காஸ்மெடிக் பொருட்கள் முகத்திலும் சருமத்திலும் ஒட்டிக் கொள்ள இப்பொருள் சேர்க்கப் படுகிறது.
15. ப்ரோபைலீன் க்ளைகால் -அதிக வெப்பத்தில் காஸ்மெடிக் பொருட்கள் உருகுவதில் இருந்தும் அதிக குளிர்ச்சியில் உரைவதிளிருந்தும் தடுக்க இப்பொருள் சேர்க்கப் படுகிறது.
16. தாலேட்ஸ்-நெயில் பாலிஷ் ,பெர்பியூம்கள்,மற்றும் ஹேர் ஸ்ப்ரேகளில் பயன்படுத்தப் படும் நிறமிகள் மங்காது இருக்க இந்த வேதிப் பொருள் சேர்க்கப் படுகிறதாம்.
அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் இரண்டு வகையினர் இருக்கிறார்கள் ,ஒரு சாராருக்கு பிராண்ட் முக்கியம்,சிலருக்கு எந்த பிராண்ட் ஆனாலும் பரவாயில்லை பார்க்க அழகாகத் தெரிந்தால் போதும் என்ற என்னமிருக்கும்.இது அவரவர் மனநிலையையும் ,செலவழிக்கும் திறனையும் பொறுத்தது. இரண்டு பேருக்கும் பொதுவான ஆலோசனையாக மேலே சொல்லப் பட்ட விசயங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அழகோ,பிராண்டோ எதுவானாலும் தரமானவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதோடு மேலே சொல்லப் பட்ட பொருட்கள் நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களின் தயாரிப்பில் சேர்க்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு பொருட்களை வாங்கத் துணிவது நல்லது.
காஸ்மெடிக் பொருட்களை வாங்கும் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
கண்டிப்பாக காஸ்மெடிக் பொருட்களின் லேபிள் பகுதியை ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கி நுணுக்கிப் படித்து விட வேண்டும்.லேபிளின் இன்கிரடியன்ட்ஸ் பகுதியில் லிஸ்டில் உள்ள கெமிக்கல்களில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
இவற்றால் என்னென்ன ஆரோக்யக் குறைபாடுகள் வரலாம்?
டால்க் போன்ற மிக நுண்ணிய வேதிப்பொருட்களால் ஸ்கின் அலர்ஜிகள் முதற்கொண்டு , நுரையீரல் நோய்கள்,இதய நோய்கள், புற்று நோய் வரை எல்லா விதமான ஆரோக்யக் குறைபாடுகளும் வரக் கூடும். ஹேர் டை அலர்ஜிகள் தோல் புற்று நோய்க்கு காரணமாகின்றன. லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு சாப்பிடும் போது அது கரைந்து வயிற்றுக்குள் சென்றால் Food Poison வரவும் வாய்ப்பிருக்கிறதாம். கைக்குழந்தைகளின் அம்மாக்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்கள் குழந்தைகளின் ஈசினோபிலியா, மூச்சுத் திணறல் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனவாம். அதனால் கண்ட கண்ட காஸ்மெடிக் வகைகளை வாங்கிப் பயன்படுத்துவதை ஸ்ட்ரிக்ட்டாகத் தவிர்த்து விடலாம் .