குளிர் காலத்துக்குச் சுகமான டிப்ஸ்!

குளிர் காலத்துக்குச் சுகமான டிப்ஸ்!

டீத்தூள், புதினா, துளசி இலைகள், உடைத்த மிளகு, இஞ்சி, ரோஜா இதழ் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாகவோ இல்லை பால் சேர்த்தோ குடிக்கலாம். இந்த மூலிகை டீ புத்துணர்ச்சி தருவதுடன் சளி, தொண்டை கரகரப்புக்கு நல்ல மருந்து.

ழைக் காலத்தில் கால் விரல்களின் இடுக்குகளில் வெண்மையாகி எரிச்சல் உண்டாகும். வெளியில் சென்று வந்த பின் உப்பு நீரில் காலை நன்றாக அலம்பி, பின் தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, இரவில் பாதங்களின் மேற்புறமும், விரல் இடுக்கிலும் பூசிக்கொண்டு படுத்தால் காலையில் பாதங்கள் பளிச் என்ற இருப்பதுடன் எரிச்சல் இல்லாமலும் இருக்கும்.

சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை, கடுக்காய் தோல், மஞ்சள், திப்பிலி, ஓமம், கிராம்பு, மிளகு இவைகளைப் பொடிசெய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி பாதியாக வற்றியவுடன் அதனை ஆறவைத்து குடித்தால் மூலிகை தேநீர் குளிர்கால நோயை விரட்டி சுகமாக இருக்கும்.

ஞ்சள் பொடி போட்ட சூடான பால் குடித்தால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

ழை மற்றும் குளிர்காலத்தில் சூடான உணவு, சூடான காய்கறி சூப்புகளைப் பருக வேண்டும்.

திமதுர வேரை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்துக் குடித்தால் நோய்ச் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, அரிசி, கோதுமை கலந்த உணவுகளை உட்கொள்வதால் உடல் சூட்டைக் கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தில் உள் சூடு பாதுகாக்கப்படும்.

கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக வெந்நீர் குடிப்பது நல்லது. சளி, இருமல் பிரச்னை வராது.

ழை குளிர் காலத்தில் சோப்பு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சோப்பினால் உடலின் வறட்சித் தன்மை அதிகமாகும்.

டலை மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் சம அளவு கலந்து அதனுடன் ஆரஞ்சுப் பழத்தோலைக் காயவைத்து பொடியாக்கிக் கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கிரீம் போல் உடலில் பூசிக் குளித்தால் வறட்சித்தன்மை நீங்கி, மிருதுத்தன்மை உருவாகும்.

லிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி உடல் மற்றும் தலையின் மேற்பரப்புப் பகுதிகளில் நன்றாகத் தேய்த்துவிட்டு இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளித்துவிட்டு ஏதாவதொரு மாய்ஸ்சரைஸ்சரிங் கிரீம் தடவிக் கொள்வது நல்லது.

ரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் உதடுகளில் பாலாடையைத் தேய்த்து மெதுவாக வருடிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.

பாதங்களில் ஏற்படும் வெடிப்பைப் போக்க தேங்காய் எண்ணெய், பசு நெய்,தேன், மஞ்சள் பொடி ஆகியவற்றை கலந்து வெடித்த பகுதிகளில் தேய்க்கலாம்.

ன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து இரவு தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கைவிரல்களிலும் தேய்த்துக்கொண்டால் சருமம் மிருதுவாகும்.

குளு குளு குளிர் சுடச்சுட சூப்

பீட்ரூட் சூப்

தேவையானவை: பீட்ரூட் – 200 கிராம், பெரிய வெங்காயம் – 1, உருளைக்கிழங்கு – 1, எலுமிச்சம்பழம் – பாதி, புதினா – சிறிதளவு, கிரீம் – ½ கப், மிளகுத்தூள் – தேவையானது, உப்பு – தேவையானது, எண்ணெய் – தேவையானது.

செய்முறை: பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல்நீக்கி வேக வைக்கவேண்டும். வெங்காயத்தை சிறியதாக நறுக்கி, எண்ணெயில் தாளித்து, வேகவைக்க வேண்டும். இவற்றை மிக்சியில் போட்டு அரைத்து, பின்பு அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதில் மிளகுத்தூள், உப்பு சேர்க்க... தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். சூப் நன்றாக கொதித்து வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பரிமாறலாம்.

முருங்கைக் காம்பு சூப்

தேவையானவை: முருங்கைக் காம்பு – 100 கிராம், தக்காளி – 1, பெரிய வெங்காயம் – 1, மிளகு – 8, இலவங்கப்பட்டை இலை – சிறிதளவு, மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பாசிப் பருப்பு – 50 கிராம், உப்பு, எண்ணெய் – தேவையானது.

செய்முறை: முருங்கைக் காம்பை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். பருப்பை வேக வைத்து, மசிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, இலவங்க பட்டை இலை, மிளகு, வெங்காயம், தக்காளி, மருங்கைக் காம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி தேவையான தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். மஞ்சள் பொடி, உப்பு, பருப்பு சேர்க்க வேண்டும். கலவை நன்றாக கொதித்தவுடன் கீழே இறக்கவும்.

 தக்காளி தேங்காய் சூப்

தேவையானவை: தக்காளி – 500 கிராம், கேரட் – 100 கிராம், வெங்காயம் – 2, பூண்டு – 2 பல், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் – 1 கரண்டி, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், உப்பு – தேவையானது.

செய்முறை: தக்காளியைப் பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காயைத் துருவி எடுத்து, வெங்காயத் தைப் பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். பூண்டை நன்றாக நசுக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பூண்டை நெய்விட்டு வதக்க வேண்டும். தக்காளி, கேரட், தேங்காய் ஆகியவற்றைப் போட்டு மூன்று தம்ளர் தண்ணீர் விட்டு அரைமணி நேரம் வேக விட வேண்டும். வெந்த காய்கறிகளை மசித்து தண்ணீர்விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

கேரட் சூப்

தேவையானவை: கேரட் – 50 கிராம், வெண்ணெய் -  1 டேபிள்ஸ் பூன், மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ½ லிட்டர், மிளகு – 10, வெல்லம் – 1 துண்டு, மிளகுத்தூள், உப்பு – தேவையானது.

செய்முறை:  கேரட்டை தோல் சீவி வேகவைத்து அரைக்க வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு மைதா மாவு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதில் காய்கறி தண்ணீர், கேரட் விழுது போட்டு கட்டியாக இல்லாமல் நன்றாக கலக்கி கொதிக்க விட்டு உப்பு, மிளகு, மிளகுத்தூள், வெல்லம் சேர்த்து கொதி வந்ததும் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com