கண்களைக் காக்கும் கறிவேப்பிலை

கண்களைக் காக்கும் கறிவேப்பிலை

கருவேப்பிலையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்பு, தாதுக்கள், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.

பெண்களின் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பசியின்மை, வயிற்றுப் பொருமல், உணவு எதுக்களித்தல் போன்ற செரிமானத் தொந்தரவுகள் அதிகமாக உண்டாகும். இதை சரிசெய்ய கறிவேப்பிலை பொடியை சிறிதளவு எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.

கருவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. இதனால் பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய் போன்ற கண் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது நமது கண் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்து, பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக்களையும் வயிற்றில் தங்க விடாது. இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரி செய்து விடும்.

மலைகளில் பயணம் செய்யும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுபவர்கள், எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலைகளையும் முகர்ந்து பார்த்தால். நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும். பயணம் இனிதாகும்.

கறிவேப்பிலை நமது உடலில் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வரமால் பாதுகாக்கிறது.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை பிரச்சனையை தடுக்கிறது.

வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது கறிவேப்பிலை.

கறிவேப்பிலை முடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை வராமல் தடுக்கிறது. முடிக்கு வலுவூட்டுகிறது மற்றும் பொடுகுக்கு சிகிச்சை அளிக்கிறது.

உடல் பருமன் உள்ளவர்கள் இதை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெறமுடியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com