தீபாவளி என்றாலே
திருவிழா உற்சாகந்தான்!
மழையோ வெயிலோ
மகிழ்ச்சிதான் மனமெங்கும்!
உணவுஉடை உறைவிடமென்ற
மூன்றுமுக்கிய முத்தானதேவைகளில்
இரண்டைத்தந்து இதயம்நிறைக்கும்
ஒற்றைப் பண்டிகையிது!
உறவுகளை ஒன்றிணைக்கும்
அற்புதப் பண்டிகையிது!
உடன்பிறந்த சகோதரிகள்
உலகின்மூலை எதிலிருந்தாலும்
சீர்வரிசை சிறகடித்து
சிதறாமல் போய்ச்சேரும்!
பாசத்தை அவைசுமந்து
பக்குவமாய் இறக்கிவைக்கும்!
பாசவலைதானே பாரினிலேஅமைதியினை
பிடித்துவைத்திருக்கும் பெருமைமிகுசாதனம்!
புத்தாடை புனைந்தாலே
புளகாங்கிதம் உடலெங்கும்
மெல்லஓடி மெதுவாய்ப்பரவி
உள்ளத்தில் உற்சாகத்தை
ஒன்றாய்ப்பரப்பி வைக்கும்!
இதயத்து ரத்தத்தில்
இன்பமும் கலந்துவிட்டால்
உடலெங்கும் அதுஓடி
உரத்தை உறுதிசெய்யும்!
உரமான உடலிருந்தால்
உலகமே இன்பமயம்!
அதிகாலை விழித்தெழுந்து
ஆயில்பாத் எடுத்துவிட்டு…
இனிப்பு காரங்களை
இரைப்பையில் அடைத்துவிட்டு…
வகைவகையான சிவகாசிவகையறாக்களை
வாசலிலே கொளுத்துகையில்
பொங்கும் மகிழ்ச்சிக்கு
புஸ்வானமும் ஈடாமோ?!
வானத்தில் மேலேபோய்
வண்ணங்களாய் உதிரும்
எந்தப் பட்டாசுமே
இவ்வின்பத்திற்கு ஈடில்லை!
பண்டிகைகள் என்றாலே
பவித்திர உற்சாகத்தை
உடலுக்கும் உள்ளத்திற்கும்
ஒன்றாய்த் தரவேண்டும்!
எல்லோரும் பூவுலகில்
இன்புற்று இருக்கவேண்டும்!
அமைதிக்கு அடிகோலி
ஆனந்தத்திற்கு வித்திட்டு
நன்றாய் வாழ்ந்திடவே
நலமதைத் தரவேண்டும்!
இந்தத்தீபாவளி இவையெல்லாவற்றையுமே
உங்களுக்குத் தந்திடட்டும்!
உளங்கெளல்லாம் மகிழ்ந்திடட்டும்!
தீப ஒளியினைப்போல்
சிறப்பான நல்லொளியே
உலகத்தைத் தழுவிடட்டும்!
நாடுகள் அத்தனையும்
நல்லமைதி மிகப்பெற்றே
முன்னேற்ற வழியினிலே
முத்தாய்ப்பாய் நடந்திடட்டும்!
இந்தநல் திருநாளில்
இதற்காகப் பிரார்த்திப்போம்!