ஸெய்கர்னிக் விளைவு- The Zeigarnik effect பற்றித் தெரியுமா?

ஸெய்கர்னிக் விளைவு- The Zeigarnik effect பற்றித் தெரியுமா?

ளவியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் அந்தப் பெண்மணி. தன் சக சினேகிதிகள் சிலரோடு, அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தார்.

ஒரு பெரிய மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள்.

இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த ஒரு இளம் சர்வர் புன்னகையோடு அவர்களை எதிர்கொண்டான்.

மெனுகார்ட் பார்த்து குழப்பிக்கொண்ட பிறகு ஒவ்வொருவராக  நிறைய அயிட்டங்களை ஆர்டர் செய்தார்கள். அத்தனையும் ஒன்று பிசகாமல், ஆள் மாறாமல், சுறுசுறுப்பாக கொண்டுவந்து கொடுத்தான் அந்த இளைஞன்.

அவனது ஞாபக சக்தியை வியந்து பாராட்டிவிட்டுக் கிளம்பினார்கள் அப்பெண்மணிகள்.

அருகிலிருந்த கடையில் ஷாப்பிங் முடித்துவிட்டு காரில் செல்லும் போதுதான் அந்த ஆராய்ச்சியாளர் பெண்மணிக்குக்கு தன் ஓவர் கோட்டை ஹோட்டலிலேயே விட்டது நினைவுக்கு வந்தது.

திரும்பி ஹோட்டலுக்குப் போனார். இப்போது அந்த இளைஞன், வேறொரு டேபிளில் சர்வ் செய்து கொண்டிருந்தான். அவரது ஒவர்கோட் அவர் விட்ட இடத்திலேயே இருந்தது.

புன்னகையோடு அவனை நோக்கினார் ஆராய்ச்சியாளர்.

அவர் பக்கம் திரும்பிய அவன் பார்வை, அவரை கொஞ்சம்கூட அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதை உணர்த்தியதோடு, “யெஸ் மேம்.. அங்கே உட்காருங்கள்” என்று வணிகப் புன்னகையோடு ஒரு இடத்தை வேறு காட்டினான். அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

ஓரிரு மணி நேரத்துக்குள்ளாகவா மறந்து விட்டான்?

Bluma Zeigarnik
Bluma Zeigarnik

உளவியல் ஆராய்ச்சியாளர்  அல்லவா? மனித மூளை பற்றி பல சுவாரசியமான செய்திகளைக் கண்டுபிடித்தார்.

வர் பெயர் ப்ளூமா ஸெய்கர்னிக் (“Bluma Zeigarnik”) ரஷ்யாவைச் சேர்ந்தவர். 1988ம் ஆண்டு வரை வாழ்ந்து, தன் 87வது வயதில் மறைந்தவர். குறுகிய கால நினைவாற்றல் (short-term memory) என்பது எல்லா மனித மூளையிலும்  நிகழும் செயல். ஒரு வேலை அல்லது task முழுமையாக நிறைவேறிய பின்னர், மனித மூளை, தானாகவே டெலீட் பட்டனைத் தட்டி விட்டு அவற்றை  எடுத்துவிடும் என்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்கு பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து பல உதாரணங்களையும் தந்திருக்கிறார்.

1927ல் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். முடிவுறாத வேலையை மட்டும் மூளை நினைவில் இருத்திக்கொள்ளுமாம். முடிந்துபோன வேலைகளையும் நினவில்கொள்ள மூளைக்கு அதிக ‘ஸ்பேஸ்’ தேவைப்படும் என்கிறார்.

வயதான பெண்மணிகள் சிலர்  வீட்டில், சீரியல் பார்க்கும்போது, போன எபிசோட் எங்கே முடிந்தது என்பதை துல்லியமாக சொல்வார்களே.ஏன்?  அந்தக் கதை இன்னும் முடியவில்லை. அடுத்த காட்சிக்கு அது எப்படிப் போகும் என்பதை எதிர்பார்த்து மனம் காத்திருக்கிறது.

எனவே மூளையின் ஓரத்தில் கடைசிக் காட்சி போய் உட்கார்ந்துகொள்கிறது. (திரைப்படங்களில் short-term memory லாஸ் என்பது கதாநாயகனுக்கு இருப்பதாக கதை பின்னப்பட்டிருக்கும்.)

ண்மையில் வயது வித்தியாசமின்றி எல்லோருடைய மூளைகளிலும் இயல்பாக நடைபெறும் செயல், இந்த short-term memory என்னும் குறுகிய கால நினைவாற்றல்.

முற்றுப் பெற்ற காரியங்களை அழித்து விடும் (அதாவது நம் மறதி) மூளை,முற்றுப்பெறாத செயல்களைத்  தேக்கி வைத்துக்கொள்ளும் என்கிறார் ஸெய்கர்னிக்.

எனவே இந்த விளைவுக்கு  The Zeigarnik Effect என்றே பெயர் சூட்டப்பட்டு விட்டது.

ATMல் பணம் எடுத்ததும், கார்டை திருப்பி எடுக்க மறந்து போவதும், ஜெராக்ஸ் எடுத்தபின்  ஒரிஜினல் பத்திரத்தை வாங்க மறப்பதும், பென் ட்ரைவ் செய்திகளை லேப்டாப்புக்குள் சேமித்த பின் அதை வெளியே எடுக்க மறப்பதும், இது போன்றவை எல்லாம் வேலை முடிந்து விட்டதாக மனம் நினைப்பதால்தான் என்பது இவர் கருத்து.

ஒருவித psychic tension காரணமாகத்தான் முற்றுப் பெறாத வேலைகள் நினைவில் இருக்கின்றன.

George Washington University School of Medicine இயக்குனர் சொல்வது என்ன?

மூளைக்கு வலது, இடது என்று இரு அரைக்கோளங்கள் (hemisphere) உண்டு என்று நமக்குத் தெரியும்.

இளம் வயதில் மனம் பொதுவாக அலைபாய்வதால் ஒரு செயலில் சட்டென முடிவுகள் எடுக்க முடியாமல் ஏதாவது ஒரு hemisphere ல் உருவாகும் முடிவை எடுக்கக் கூடும். அது தவறான முடிவாகவும் போகலாம்.

ஆனால், 60 வயதாகும் போது, இரண்டு hemisphere களும் இணக்கமாக இருப்பதால், இரண்டையும் ஒரே நேரத்தில் உபயோகிப்பதால்,  ஒருவரின் படைப்பாற்றல் (creative possibilities) நிச்சயம் அதிகரிக்கும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்  

இளமையில் இருக்கும் சிந்திக்கும் வேகம் 60 வயதில் இல்லாமல் போகலாம்; ஆனால் தெளிவு இருக்கும்.

பல வயதுக் காரர்களிடம் ஒரே மாதிரி  சோதனைகள் நடத்தப் பட்டன. இளம் வயதினர் குழப்பமான முடிவுகளையும், வயதானவர்கள் சரியானவற்றையும் எடுத்தார்கள். 60 வயதுக்கு மேல்,  மூளை ஒரு வித நெகிழ்வுத்தன்மை (flexibility) கொள்வதால், எதிர்மறை எண்ணங்களை விலக்கி ,தேவையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

குறைந்த சக்தி செலவில் (less energy) தேவையில்லாத வற்றை நீக்கி சிக்கலான பிரச்னைகளை எளிதில் கையாள முடிகிறது.  சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது. (இதைத்தான் அனுபவம் என்று அழகாகச் சொல்லி விடுகிறோமே..)

ஒருவரின் அறிவார்ந்த செயல்பாடுகள், (intellectual activity) 60 வயதுக்கு மேல்தான் உச்சத்தில் இருக்கும் என்ற கருத்தினைப் பதிவு செய்கிறார் இந்த இயக்குனர்.

சிலர் 60 வயதுக்கு மேல்தான் தங்கள் படைப்பாற்றல் திறமைகளில் பிரகாசிக்கத் துவங்குவார்கள்.

ஸெய்கர்னிக் இதையே கொஞ்சம்வேறு விதமாக,

“ஒரே செயலில் தொடர்ந்து ஈடுபடாமல், அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபடியும் தொடர்ந்தால் உங்கள் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்” என்கிறார்.

மோன்சி யூரி (Monchi Uri) என்னும் கனடா நாட்டு மருத்துவ அறிஞர் இந்த விளைவை எப்படிப் பார்க்கிறார் தெரியுமா?

யதாகும் போது மூளையில் இருக்கும் நியூரான்கள் அழிந்துவிடும் என்று பொதுவான கருத்து உண்டு. உண்மையில், ஒருவர் மூளைக்கு வேலை கொடுக்காமல் இருந்தால்தான் அவற்றின் இடையே இருக்கும் இணைப்புக்கள் மறைந்துவிடும். மூளை சுறுசுறுப்பாக இயங்க, புதிய கலைகளை, இசையைக் கற்றுக் கொள்ளலாம். நண்பர்களோடு உற்சாகமாக இருக்கலாம். புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம் என்று நிறைய “லாம்”களை அடுக்குகிறார்.

ஆரோக்கியமான உடல் - மன நலத்தோடு வாழ்பவர்களின் மூளை செயல்பாடுகள் 90 வயதானாலும் தீர்க்கமாகவே இருக்கும் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com