கை விரல்களை அழகாகக் காட்ட நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டால் மட்டும் போதாது. மசாஜ் செய்து முறையாகப் பராமரித்தலும் அவசியம்.
தெரிந்த ஃப்யூட்டிசியன் கூறிய எளியமுறை இதோ:
உடல் ரிலாக்ஸாக இருக்க Body மசாஜ் உடன், கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வது அவசியம்.
விரல்களை அதிகம் பயன்படுத்தி வேலை செய்பவர்கள், இந்த எளிமையான மசாஜை செய்து வந்தால், வலி நீங்கி புத்துணர்ச்சியைப் பெறலாம்.
முதலில் சிறிது எண்ணெய் அல்லது கைகளுக்குத் தடவும் லோஷன். இவற்றில் ஏதாவது ஒன்றை கைகளில் தடவி பின் மெதுவாக அதை தோலில் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் விட்டமின் E உள்ள எண்ணெய் கொண்டு கைவிரல்கள், முக்கியமாக மணிக்கட்டுப்பகுதி, உள்ளங்கை ஆகிய இடங்களில் மசாஜ் செய்வது முக்கியம்.
ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டுவிட்டு மசாஜை அடிக்கடி செய்துவர உடல் ரிலாக்ஸ் ஆகும்.
விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுடன் இணைவதால், மணிக்கட்டு மசாஜ் புத்துணர்ச்சியைத் தரும்.
இதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. டீ.வி. பார்க்கும் நேரம் அல்லது வாக்கிங் செல்லும் நேரங்களில் கூடச் செய்யலாம்.
இது செலவற்ற விரல் மசாஜ்.