மஞ்சள் கிழங்கின் மூன்று வகைகள் என்னென்ன தெரியுமா?

மஞ்சள் கிழங்கின் மூன்று வகைகள் என்னென்ன தெரியுமா?
Published on

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என மஞ்சள் கிழங்கில் மூன்று வகைகள் உண்டு.

முட்டா மஞ்சள் முகத்துக்குப் பூச பயன்படுகிறது. முடி வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் உள்ள மஞ்சளைப் பூசுவதால் முகம் கை கால்களில் முடி வராமல் தடுக்கவும், மினுமினுப்பைத் தந்து முகப்பொலிவைக் கூட்டவும் பெண்களுக்கு வசீகரம் தர உதவும் ஒப்பனைப் பொருள்களில் இந்த மஞ்சளுக்கே பெரும்பங்கு உண்டு.

ஸ்தூரி மஞ்சள் மிகுந்த வாசனையுடன் இருக்கும். இதை நலங்கு மாவு எனப்படும் வாசனைப் பொடிகள் மற்றும் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்துவார்கள். மேலும் குழந்தைகளுக்கு இந்த மஞ்சளைப் பூசுவதும் உண்டு.

விரலி மஞ்சள்தான் சமையலறையில் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சள் கிழங்கின் நீண்டிருக்கும் பகுதிகளை சாணநீரில் வேக வைத்துப் பதமாக பொடிசெய்து ஏதுவாக தயாரிப்பார்கள். இந்த மஞ்சள் பொடி நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி  கொண்டது என்பதால் சமையல் மற்றும் வாயிற் படிகளில் பூசுவது, வீட்டில் தெளிப்பது மற்றும் விழாக்களில் ஒருவர் மீது ஒருவர் தெளிப்பது எனப் பல விதங்களில் பயன்பாட்டில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com