Vitamin B9...
Vitamin B9...

பெண்களின் கரு வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் அமிலம் எது தெரியுமா?

தாய்மை சிறப்புற பெரிதும் துணை புரிவது வைட்டமின் பி9 என்னும் ஃபோலிக் அமிலம். அது எவ்வாறு கர்ப்ப காலத்தில் உதவி புரிகிறது, அது நிறைந்துள்ள உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம். 

(Vitamin B9- Folic Acid) ஃபோலிக் அமிலம்:

ஃபோலிக் அமிலம் சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் முதிர்வுக்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்த வைட்டமின் நமது மரபணுக்களாகிய டி.என்.ஏ உற்பத்திக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் பெருமளவில் உதவுகிறது. மேலும் முதுகு தண்டில் உள்ள திரவத்திலும் செயல் படுகிறது. இது பெண்களின் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நரம்பு பிரச்னைகளை குணமாக்க பயன்படுகிறது. 

மேலும் செல்கள் முறையான வளர்ச்சி பெறவும் கர்ப்பத்தில் இருக்கும் கரு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் தேவை முக்கியம் என்பதால் பெண்கள் கர்ப்பம் உருவவதற்கு முன்பும் , கர்ப்ப காலத்திலும் ஃபோலிக் அமிலம் போதுமான அளவில் கிடைக்க பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வைட்டமினின் குறைபாட்டால் ஒரு வகை ரத்த சோகை ஏற்படும். இதற்கு காரணம் குறைவாக- இந்த வைட்டமினை எடுத்து கொள்வது. ஃபோலிக் அமிலம் உடலில் உறிஞ்சப்படுவதில் குறைபாடு, அதிகமான ஃபோலிக் அமிலம் தேவை போன்றவையால் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
Vasambu Benefits: நோய்களை துவம்சம் பண்ணும் வசம்பு!
Vitamin B9...

போலிக் ஆசிட் சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து விடும். சிறுகுடலில் நோய் இருக்கும்போது போலிக் அமிலம் போதிய அளவு உணவுப் பொருட்களில் இருந்து உறிஞ்சப்படாது போகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு ஏற்படும். கர்ப்பம் ,உடலில் கட்டிகள், ரத்த அழிவு ,இரத்தசோகை, தொற்று நோய்கள், மருந்துகள் சாப்பிடுவது போன்ற கால கட்டங்களில் ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகரிப்பதால் குறைபாடு ஏற்படும் .அப்பொழுது சரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் இவற்றை நிவர்த்தி செய்யலாம்.

(Vitamin  B9 -Folic Acid) ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள் :

உலர்ந்த பூஞ்சை, கல்லீரல், கோதுமை முளை, மற்றும் அரிசி, தவிடு போன்றவை நல்ல அளவில் ஃபோலிக் அமிலத்தை கொண்டுள்ளது. முழுமையான தானியங்கள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் போதியளவும், பட்டைத் தீட்டப்பட்ட அதாவது அரைத்த தானியங்கள், மற்ற காய்கறிகள் பால் மற்றும் பழங்கள் போன்றவற்றில் மிதமான அளவும் இருக்கும். 

வெண்டைக்காய்
வெண்டைக்காய்

வெண்டைக்காய்:

இதில் ஃ போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு உதவும். பசியைத் தூண்டும். தசை ,இரத்த விருத்திக்கு உதவும் 

கத்திரிக்காயில் உள்ள ஃபோலிக் அமிலத்தில் இரும்பு சத்தும் பாஸ்பரசும் உள்ளன. இது பசியை உண்டாக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். 

வெள்ளரிக்காயில் ஃபோலிக் அமிலம் சிறிதளவு உள்ளது. இது தாகத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உணவை எளிதில் செரிமானம் செய்யும். 

புதினாவில் ஃபோலிக் அமிலம் 114 மைக்ரோகிராம், கால்சியம் 200 மில்லி கிராம், இரும்புச்சத்து 15 புள்ளி 6 மில்லி கிராம் ஆகியவை உள்ளன. வைட்டமின் பி,சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்பு சத்து மிகுந்துள்ளதால் ரத்த சோகையை போக்கும். 

முட்டைக்கோஸில் ஃபோலிக் அமிலம் சிறிதளவு உள்ளன. இந்த நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவும்

கருவேப்பிலையில் ஃபோலிக் அமிலம் உள்ளது. வைட்டமின் ஏ சத்து மிகுந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது. 

Vitamin B9...
Vitamin B9...

குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு இதன் குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படும். இதில் சிவப்பணுக்கள் வழக்கத்திற்கு மாறாக பெரியதாக இருக்கும். இவர் களுக்கு சில நேரங்களில் பிற வைட்டமின் குறைபாடுகளும், இரும்புச்சத்து குறைபாடு இருக்கக் கூடும். இதனால் தான் கருவுற்ற பெண்களுக்கு இரும்பு சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த மாத்திரையை தருகிறார்கள். கருவுற்ற பெண்களுக்கு 300 மைக்ரோகிராமிலிருந்து 500 microgram வரை தரப்படுகிறது. மேலும் கற்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினசரி 500 மைக்ரோ கிராம் அளவிலேயும் போலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவதும் இந்த மாதிரி உள்ள முக்கியமான காரணங்களால் தான். இதை பெண்மணிகள் நன்றாக புரிந்து கொண்டு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இந்த வைட்டமின் செல் கருவில் இருக்கும் 'நியுக்ளிக்' அமிலங்கள் உருவாவதற்கும் பெரிதும் பயன்படுவதால் செல் வளர்ச்சி அதிகமாக இருக்கின்ற குழந்தைகளின் வளர்ச்சி பருவம், கர்ப்பகாலம் ஆகியவற்றின் போது இந்த வைட்டமின் மிகுந்த அளவு தேவைப்படும் . அப்போது ஏதாவது உணவு  பற்றாக்குறை இருக்குமானால் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் நல்ல உணவினை எடுத்து ஆரோக்கியம் காப்போமாக!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com