
சமீப காலமாகவே இணையத்தில் பொது அறிவு சார்ந்த கேள்விகள் உலாவி வருகின்றன. இந்த கேள்விகள் பலருக்கும் உதவிகரமாகவே இருக்கின்றன. குறிப்பாக இது ஐஏஎஸ்-ஐபிஎஸ் தேர்வுக்கான தயாரிப்பாக இருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதேனும் போட்டித் தேர்வாக இருந்தாலும் சரி, பங்கேற்பாளர்கள் தங்கள் பொது அறிவை அதிகரிக்க பிரபலமான வினாடி வினா கேள்விகளை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இணையத்தில் கேட்கப்பட்ட சில சுவாரஸ்ய கேள்விகளும், அதற்கான பதில்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கேள்வி 1: இந்தியாவில் உள்ள ஆறுகளில் ஆண் நதி எது?
நதி என்றாலே அது பெண்ணை தான் குறிக்கும். கங்கா, யமுனா என நதிகளுக்கு பெண்களின் பெயரே வைக்கப்பட்டுள்ளன. நதியை தாய் என்றே பாவித்து கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஆண் நதி என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. அதற்கு சரியான பதில், பிரம்மபுத்திரா நதி ஆகும்.
கேள்வி 2 : நள்ளிரவில் சூரியன் எங்கே உதிக்கிறது?
வட துருவத்தின் அருகிலுள்ள சில இடங்களில், கோடை காலத்தில் நள்ளிரவில் சூரியனைக் காணலாம். இதனால் நார்வே நள்ளிரவு சூரியனின் நாடு (land of the midnight sun) என அழைக்கப்படுகிறது.
கேள்வி 3: இந்தியாவில் எந்த நதி எதிர் திசையில் பாய்கிறது?
நர்மதா நதி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில், இந்தியாவில் எதிர் திசையில் பாயும் ஒரே நதி ஆகும்.
கேள்வி 4: உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரிய கடல். இது பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.
கேள்வி 5: எந்த விலங்குக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் வியர்வை வரும்?
நீர்யானையின் வியர்வை இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இது அவற்றின் சருமத்தைப் பாதுகாக்க இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
கேள்வி 6: நாய்கள் இரவில் மட்டும் ஏன் அழுகின்றன தெரியுமா?
நாய்கள் இரவில் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. நம்பிக்கைகளின் படி, நாய்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும். பசி, குளிர் அல்லது துணை நாய்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது இரவில் அழுகின்றன. நாய்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படும் போது கூட அழுகின்றன. இது மனிதக் குழந்தைகள் அவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படும் போது காட்டும் நடத்தையைப் போன்றது.
கேள்வி 7: இந்த உலகில் எத்தனை நாய்கள் உள்ளன?
உலக விலங்கு அறக்கட்டளை வலைத்தளத்தின் படி, உலகில் சுமார் 900 மில்லியன் நாய்கள் உள்ளன. இதில் 470 மில்லியன் செல்ல நாய்களும், மீதமுள்ளவை தெரு நாய்களும் ஆகும்.