எங்க ஊரு SUPER WOMAN
எங்க ஊரு SUPER WOMAN

எங்க ஊரு SUPER WOMAN - 4 அறிமுக அணிவகுப்பு!

சாதனைப் பெண்மணி - 4 : சுசீலா மாணிக்கம்

அறிமுகப்படுத்தியவர்: கே.சரண்யா

K.Saranya, Susheela Manickam
K.Saranya, Susheela Manickam

'எங்க ஊரு SUPER WOMAN! சிங்கப்பெண் சுசீலா மாணிக்கம். மலைக்கோட்டை நகரமாம் திருச்சி மாநகரின் மனிதருள் மாணிக்கம் நம்ம சுசீலா மாணிக்கம். கல்கி குழும பவளவிழா ஆண்டு கொண்டாடத்தின் (மங்கையர் மலரின்) தங்க தாரகை. பெண்கள் மலர் வார இதழ் எழுத்தாளர். மனிதநேயம் கொண்ட மனிதி. பன்முக திறனாளர். சிறந்த கல்வியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர்,சமூக செயற்பாட்டாளர்.

கல்கி குழும பவள விழாவில் "தங்க தாரகை" , பறவை முனியம்மா,தாயுள்ளம்
கல்கி குழும பவள விழாவில் "தங்க தாரகை" , பறவை முனியம்மா,தாயுள்ளம்

இந்த சிங்கப்பெண்ணின் சாதனைகளை சொல்வதா அல்லது அவரின் சமூக செயற்பாட்டை சொல்வதா இல்லை எழுத்து பயணத்தை சொல்வதா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.  சிகரம் தொட வயது ஒரு தடை அல்ல என்பதை நிருபித்த பறவை முனியம்மா முதல், திரு.வாஜ்பாயி அவர்களால் பாதம் தொட்டு வணங்க ஆசி வழங்கிய மதுரை சின்னப்பிள்ளை அம்மா போன்ற தாய்மார்களின் செல்லப் பெண்மணி இவர்.

இவரின் மனித நேயத்தின் உதவியால் பயனடைந்தோர் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஏழைகளின் தெய்வம் என கருதப்படும் பத்து ரூபாய் சாப்பாடு ராமு தாத்தா அவர்கள், மதுரை தத்தநேரி மயானத்தில் மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டாய் விளங்கும் வெட்டியான் ஹரி அவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், பல முதியோர் இல்லங்கள், திருநங்கைகள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

தாயுள்ளம் கொண்டவர் சுசீலா. தமிழரின் வீரவிளையாட்டாம் ஜல்லிக்கட்டு. வாடிவாசலில் வீரதமிழச்சியாக மிளிரும் ரேணுகாவிற்கு தாயில்லா குறை தீர்க்க தாய் ஸ்தனாத்தில் இருந்து சீர்செனத்திகள் செய்து திருமணத்தை சிறப்புடன் நடத்தி அழகு பார்த்தவர்.

விழியற்றவர்களுக்கு விழியாக இருந்து பத்து வருடங்களுக்கு மேலாக அரசு பெண்கள் பார்வையற்றோர் பள்ளிக்கு சென்று இலவசமாக அறிவியல் பாடத்தினை விளக்கி பயிற்றுவித்து அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பிறவிப்பயன் என ஆத்மதிருப்தி கொள்கிறார்.

இதெல்லாம் எப்படி சாத்தியம்? தனி ஒருவராக தன் குடும்ப செலவுக்காக கணவர் கொடுக்கும் பணத்தில், சிக்கனம் செய்து, தனக்கென எதும் வைத்துக்கொள்ளாமல் சேமிக்கிறார். அந்த பணத்தைக்கொண்டு தேவையிருப்பவர்களுக்கு உதவுகிறார்.

கொடுங்காலன் கொரோனா என்கிற கொடிய நோயில் உலகமே சிக்கி திணறிய நேரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற அரிசி , பருப்பு போன்ற வாழ்வாதாரத்திற்கு அவசியமானவற்றை அளித்தவர். இவரையும் கொரோனோ விட்டு வைக்கவில்லை. தர்மம் தலைக்காக்கும் என்னும் சொலவடைக்கு ஏற்ப மறுப்பிறப்பு எடுத்து தன் சேவையை தொடர்கிறார்.

கண்ணகி விருது, தனிஷ்ப் புதுமைப் பெண் , உள்ளாட்சி முரசு காலை நாளிதழ் - சிறந்த பத்திரிகையாளர் விருது
கண்ணகி விருது, தனிஷ்ப் புதுமைப் பெண் , உள்ளாட்சி முரசு காலை நாளிதழ் - சிறந்த பத்திரிகையாளர் விருது

இவரது கல்வி: Msc science, B.Ed, Diploma in Archealogy and Epigraphy இவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும்: ** Best outgoing writer award - காலேஜில் (1987) **தாய்மை விருது (2012), PDI organisation **எழுத்துலகில் தடம் பதித்து வாசகர்களை கட்டிப்போட்ட இவர் , புதினம் மாத இதழ் நடத்திய "நானும் என் அம்மாவும்" என்ற இண்டர்நேஷனல் அளவிலான கட்டுரைப்போட்டியில் இரண்டாவது பரிசு . ** சின்னராஜா பெரிய ராஜா ஸ்லோகன் போட்டியில் முதல் பரிசாக ஹூண்டாய் கார். (2013) ** ஸ்கூட்டி பெப் பரிசாக பெமினா மால் ஸ்லோக போட்டியில் முதல் பரிசு (2016) **கண்ணகி விருது - நேர்ப்படப் பேசு (2018) தற்போது வகிக்கும் பதவிகள் Tamil content writer, Florida International University Tamil and Diaspora Research Group Admin group , World Tamil Campaign (WTC) ,Australia Senior Reporter , Vaiya Tamil monthly magazine Active member in " How to learn Tamil Languages in 24 hours . சற்றே அசந்து போகிறேன்.வியந்து நிற்கிறேன். தமிழை உயிர் மூச்சாக சுவாசிக்கும் இவர் அதன் மேம்பாட்டிற்காக செயல்படுகிறார். தேவைகள் இருக்குமிடம் அறிந்தால் உதவிக்கரம் நீட்டுகிறார்.தன்னால் இயன்றளவு செய்துக்கொண்டு இருக்கும் நேசமும் பாசமும் மிக்கவர். எளிமையும் சிறந்த பண்பும் ஒருங்கே பெற்ற தொண்டுள்ளம் மிக்க சுசீலாவின் தோழி என்று என்னை சொல்லிக்கொள்ளவதில் பெருமையே.

Dr. Mrs. Kalamati, President of Florida University's Tamil Institute, Dr. Mrs. Malini, President of Annai mozhi  anbumozhi
Dr. Mrs. Kalamati, President of Florida University's Tamil Institute, Dr. Mrs. Malini, President of Annai mozhi anbumozhi

சாதனைப் பெண்மணி - 4 : சுசீலா மாணிக்கம்

சுய அறிமுக உரை:

அன்பான வணக்கம்... என்னைப் பற்றிய சுய அறிமுகமா? ‘சட்’ எனத் தோன்றுவது இதோ:

எப்போதாவது ஏதாவது ஓரிடத்தில் ஒரு க்ஷணம் யார் மனதிலாவது நமது சொற்களோ, செயல்களோ, சிந்தனைகளோ நல்விடயங்களைப் பேசுகிறது என்றால் அதுதானே நம் வாழ்வில் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியம். அதற்காக கைகளில் நிறைய காசு புரள வேண்டும். பல பெரிய மனிதர்கள் தொடர்பு வேண்டும். நன்கு படித்திருக்க வேண்டும். நாலு இடங்களுக்குச் சென்று வர வேண்டும் – என்பதோ வயதோ எதுவும் தடையல்ல. வீட்டுக்குள்ளேயே இருந்து ஒரு பெண் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஓர் உதாரணம்.

கடந்த 25 வருடங்களாக பிரபஞ்ச சக்தியிடம் பதித்துக்கொண்டிருந்த எண்ணங்களும் செயல்களும் இன்று பத்து, நூறாய் திரும்ப திரும்பிக் கொண்டிருக்கின்றன என்னிடமே... நான் செய்துவரும் செயல்கள் மூன்றே மூன்றுதான் அன்புக்குரிய தோழமைகளே...

« அன்பை அபரிதமாக பிறருக்குத் தருவது.

« குறிக்கோள்களை அக்னி குஞ்சாக்கி மனதினுள் அடைகாத்துக் கொள்வது.

« பிரபஞ்சத்திடம் தினமும் எனது குறிக்கோளைப் பதிவு செய்துவிட்டு குடும்பப் பணிகளைச் செவ்வனே செய்வது.

இப்படி வாழ்ந்துவரும் பொழுது மற்றவற்றை பிரபஞ்சம் பார்த்துக்கொள்ளும் தோழிகளே.

(‘எங்க ஊரு சாதனைப் பெண்மணி’ வரிசையில் எனை நிறுத்தி அழகு பார்க்கும் ஸ்ரீரங்கம் சரண்யா கண்ணன் அவர்களுக்கு மிகுந்த நன்றி...)

தற்போதைய பணிகள்:

« புளோரியா பல்கலைக் கழகம் தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர் குழுவிற்கான Content Writer.

« ஆஸ்திரேலியா அன்னை மொழி அன்புவழி அமைப்பு சார்ந்த ‘வையத் தமிழ் பன்னாட்டு இதழ். மூத்த பத்திரிகையாளர்.

« 24 மணி நேரத்தில் தமிழ் கல்வி நிர்வாக குழு உறுப்பினர்.

இந்த சாதனைப் பெண்மணிகளின் அணிவகுப்பில் 'SUPER WOMAN' யார் என்பது இறுதிப் பதிவாக ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும்.

logo
Kalki Online
kalkionline.com