என்னவரை தேடித் தந்த என்னவள் மங்கையர் மலர்.

என்னவரை தேடித் தந்த என்னவள் மங்கையர் மலர்.

43வது ஆண்டு ஸ்பெஷலாக மலரும் மங்கையர் மலருக்கு முதலில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இவள், என் கல்லூரி நாட்களிலிருந்தே என்னுடன் பயணிக்கிறாள் என்பதில் சற்று கர்வம் கலந்த பெருமை. முதன் முதல் என்படைப்பு வெளியாகி விதவிதமான பரிசுகளும், பணமும் பரிசாக கிடைத்தது.

அப்போதே என்னுடன் இணைந்து என்னை மெருகேற்றினாள். தொடர்ச்சியாக எண்ணற்ற படைப்புகள், போட்டியில் பங்களிப்பு என என்னை உற்சாகப்படுத்தி பரிசுகளை வாங்க வைப்பதில் அவள் ஓயவில்லை. இத்துடன் விட்டாளா! என் வாழ்க்கைத் துணையையும் அவள்தான் தேடித் தந்தாள்.

ம்… மங்கையர் மலரின் திருமண மலர் மூலம்தான் என்னவர் என்  கரம் பற்றினார். 1995-ல் திருமணம். 2016-ல் 60 ஆம் கல்யாணம். என எங்களுடன் அவள் இனிதே பயணிக்கிறாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் 2019-ல் “தொடர் சங்கிலிப் போட்டியில்” பங்கு பெற்று “ஹீரோ ப்ளஷர் “ வண்டியை பரிசாக பெற்றேன். சமையல்  போட்டியில் பங்கு பெற்று இட்லி குக்கரை பரிசாக பெற்றேன். எதை சொல்வது எதை விடுவது என தெரியாமல் என்னை இன்று வரை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்துவதில் அவளுக்கு நிகர் அவளே,! முயற்சியும், உழைப்பும் இருந்தால் ஒவ்வொரு வாசகிகளின் இல்லங்களிலும் மங்கையர் மலர் “யாதுமாகி நிற்பாள்” என்பதே நிதர்சன உண்மை. அவள் புத்தக வடிவில் வந்து, அவளை ஸ்பரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் எண்ணற்ற வாசகிகளில் நானும் ஒருவள்…..அவளுடனான பயணம் அன்றும்,….இன்றும்….என்றும் தொடரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com