எதிர்பார்ப்பே ஏமாற்றங்களாகின்றன!

எதிர்பார்ப்பே ஏமாற்றங்களாகின்றன!

புதிதாக திருமணமான தம்பதிகளிடையே போகப் போக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, 'அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு விடுவார்கள் என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.

ஆனால் உண்மையில், முதலிலேயே அவர்கள் அனுசரித்துப் போகும் அளவு, வெளிப்பட்டு விடுகிறது. நாளாக ஆக அவர்கள் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்வது குறையவே செய்கிறது.

திருமணமான புதிதில் கணவன் மனைவியிடையே கோபம், பொறாமை, பகைமை, சந்தேகம், ஏமாற்றங்கள் எதுவுமே இருக்காது. எதிர்பார்ப்புக்கள் எல்லாம் நேர்மறையானது. இன்னமும் சண்டை, சச்சரவு, பிரச்னைகளால் களங்கப்படுத்தாத உண்மையான உறவு. இந்த உறவு பெருமைப் படக்கூடியது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்துப் பழகுவது சுலபமாக இருக்கிறது.

நாளாக ஆக சுடுசொற்கள். புண்படுத்தும் செய்கை. மன வேற்றுமை. பரஸ்பர குற்றச்சாட்டுகள். 'உனக்கு` என்னைப் பிடிக்கவில்லை,' 'உனக்கு நான் முக்கியமில்லை' போன்ற எண்ணங்கள் பழைய இன்ப மாயை நிலையை மறைத்துவிடும். எதிர்பார்த்துக் கட்டிய ஆகாசக் கோட்டைகள் எல்லாம் தரைமட்டமாக ஆகிவிடும்.

நமக்கெல்லாம் நிறைய அபிப்பிராயங்கள். கருத்துக்கள் எல்லாம் இருக்கின்றன. சின்ன வயதில் நடந்த பல அனுபவங்களின் உணர்ச்சி பூர்வமான பாதிப்புக்களே இவைகள். ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் ஆதார மற்றவை. ஆனால் இவை நம் மணவாழ்க்கையை மிகத் தீவிரமாக் பாதிக்கக் கூடியவை. சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது.

ஆண்கள் தங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் குணங்கள்:

1. அவள் எப்பொழுதும், எந்த நேரத்திலும், காலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுதும், அழகாக, சுத்தமாக, கச்சிதமாக அலங்காரமாக இருக்க வேண்டும்.

2. எப்பொழுதும் கணவனுக்கு ஆதரவாக, முக்கியமாக. அவன் தவறு செய்திருக்கும் பொழுது, அவனுக்குப் பக்கபலமாக,  ஒரே சீரான நல்ல மூடில் இருக்க வேண்டும்.

3. அவனுடன் சேர்ந்து விளையாடுபவளாக இருக்க வேண்டும். ஆனால் எப்பொமுது தோற்றுப் போக வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

4. அவனுக்கே தெரியுமுன், அவன் மன உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு. அவன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவளே அவனை முழுமையாகப் புரிந்துகொள்ளுபவள் என்பதால். அவன் பேசுவதே அவசியமற்றதாக இருக்க வேண்டும்.

5. அவன் வேறு எண்ணங்களில், வேலைகளில் மூழ்கியிருக்கும்பொழுது, அவளை கவனிக்காதபொழுது குற்றம் சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி, கணவன் தன் அன்பை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

6. ஒரு நல்ல மனைவிக்கு, குறைந்த செலவில், ருசியாக, நல்ல சத்துணவு செய்யத் தெரிய வேண்டும்.

அவனின் சினேகிதர்கள், உறவினர்களின் ஏற்றுக் கொள்ள முடியாத குண விசேஷங்களைக் கண்டுகொள்ளவே கூடாது.

7. குறைந்த விலையில் நல்ல சாமான்கள் வாங்கத் தெரிந்தவளாக இருக்க வேண்டும். வீட்டிற்குத் தேவையான அளவு தையல் கலை தெரிந்தவளாக, பழைய துணிகளையும் புது டிரஸ் ஆக, கர்ட்டனாக' (திரைச்சீலை) தலையணை உறையாக, மிதியடியாக மாற்றத் தெரிந்தவளாக இருக்க வேண்டும்.

8. கணவனுக்கு முதல் ஸ்தானம் கொடுத்து, இரண்டாவது இடத்தையே, குழந்தைகளுக்கு அளிப்பளவாக இருக்க வேண்டும். மற்ற வேலை  எது இருந்தாலும், கணவனின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது.

9. அவளுக்கென்று விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. அப்படி இல்லாமல் தனியாக ஏதேனும் ஆசைகள் இருந்தால் அதை வெளிவராமல் அமுக்கிவிட வேண்டும். சொந்த அபிப்பிராயங்கள் கணவனுடைய ஒத்துப் போவதாக இருக்க வேண்டும்.

10. உடல் உறவுக்குக் கணவன் கூப்பிட்ட பொழுதெல்லாம் ஆர்வத்துடன் இசைவாள். அவன் எப்படி நடந்து கொண்டாலும், அவனையே மன்மதனாகக் கருதுவாள் அவனுக்கு இஷ்டமில்லாவிட்டால் தல ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வால் பெட்ரூமுக்கு உள்ளே தாசியாகவும், வெளியே தேவதையாகவும் நடந்து கொள்வாள்,

11. மனைவி என்றும் கணவனுக்கு உண்மையானவளாக நடந்து கொள்வாள், இப்படிப்பட்ட உயர்ந்த குணவிசேஷங்களை உடைய ஒரு மனைவியை எதிர்பார்த்தே ஒரு ஆண், ஒரு பெண்னை மணந்து கொள்கிறான். அவள் இதற்கு மாறாக நடந்து கொள்வாள் என்று அவன் நினைத்தே பார்ப்பதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com