மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் FAS TAG வசதி

மும்பை பர பர
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் FAS TAG வசதி

டிஜிட்டல் பரிவர்த்தனை Fas Tag  வசதி வழியே கட்டணம் செலுத்தும் வசதியை, மும்பை பன்னாட்டு விமான நிலையம் டெர்மினல் 2 பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் பன்னாட்டு விமான நிலையத்தின் 2 ஆவது டெர்மினலில் பார்க்கிங் வசதி உள்ளது.

விமானத்தில் பயணம் செல்லும் பயணிகளின் கார்கள் உள்ளே சென்று நிறுத்தவும், வெளியே கொண்டு வரவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதைத் தவிர்க்க பணமற்ற பரிவர்த்தனையாக  Fas Tag முறையை அறிமுகப்படுத்தியிருப்பதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி ஏற்படுத்தியதன் காரணமாக வாகனங்கள் உள்ளே நுழையவும், வெளியே வரவும் ஆகும் நேரம் குறையும். கட்டணம் செலுத்தவும் ரசீது வாங்கவும் தேவையில்லை.

மேலும் Fas Tag  வண்டிகளுக்கென தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதால் அதிக நேரம் வரிசையில் நிற்கத் தேவையில்லை.

Fas Tag  அட்டையை வாகனங்களின் முன்பக்கத்தில் ஒட்டி வைத்துவிட வேண்டும். தற்சமயம் விற்பனையாகிவரும் புதுக் கார்களில் Fas Tag   அட்டை ஒட்டப்பட்டே வருகிறது.

மனித உழைப்பிற்கு இடமில்லை. டோல்கேட்டை வாகனங்கள் கடக்கையில் ரேடியோ அலை வரிசை தொழில் நுட்பத்தின் மூலம் Fas Tag   அட்டையின் மூலம் பணம் செலுத்தப்பட்டுவிட, பயணம் விரைவாகவும், எளிதாகவும் அமையும்.

ப்ரீபெய்டு (Prepaid), Smartcard போன்று Fas Tag  அட்டை செயல்படும். 5 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம். ரீசார்ஜ் செய்யலாம். வங்கிக் கணக்குடனும் இணைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com