பண்டிகைகளும் பலகாரப் படையல்களும்!

பண்டிகைகளும் பலகாரப் படையல்களும்!

திருவிழாக்களும் பண்டிகைகளும் மனித குலத்தினுடைய மனமகிழ்வுகளின் கூட்டு வெளிப்பாடு, வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை அந்த ஒரு நேரத்தில் அகற்றிவிட்டு, எல்லோரும் ஓர் நிறை என்கிற சமத்துவத்தை நிலை நிறுத்துவதே நம் பண்டிகைகளின் உயரிய நோக்கம். அடித்தட்டு. நடுத்தட்டு, மேல் தட்டு என்றெல்லாம் பொருளாதார வர்க்க பேதம் ஏதுமின்றி கொண்டாடப்படுவதே பண்டிகைகளின் மகத்துவம் ஆகும்.

பொங்கல் பண்டிகை என்பது சூரிய வழிபாடாகும். ஆறு வகை சமயங்களிலும் சூரிய வழிபாடு முக்கியமானது. இயற்கைச் சுழற்சிக்கும் உழவுக்கும் சூரியன் இன்றியமையாதது. தைப்பொங்கல் திருநாளன்று வெட்டவெளியில் மூன்று கற்களைக் கூட்டி வைத்து மண்பானையிட்டு விறகு எரித்து சர்க்கரைப் பொங்கல் சமைத்து இறைவனுக்குப் படையலிட்டு, பின்னர் அதனை நாம் அனைவரும் உண்பது வழக்கம். தைப்பொங்கல் திருநாளில் மட்டும் அனைவரது வீடுகளிலும் அவசியமாக சர்க்கரைப் பொங்கல் தவறாமல் இடம் பிடித்திருக்கும்.

வணி மாத சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி. யானைக்கு மிகவும் பிடித்த உணவு தேங்காய்,  பழம், வெல்லம். தேங்காய், வெல்லம் இரண்டினையும் பூரணமாக்கி அதனை வெள்ள மாவுக்குள் மறைத்துவைத்து வேகவைத்துச் செய்யப்படுவது. ஓங்கார பிரணவக் கடவுளான விநாயகர். கொழுக்கட்டை மூலமாக பேருண்மையினை நமக்கு உணர்த்துகிறார். இந்த உலகம் என்பது ஒரு மாயை (கொழுக்கட்டையின் மாவு போன்றது). பூரணம் என்பது ஞானம் அதாவது கொழுக்கட்டை மாவுக்குள் மறைந்திருப்பது. பூரணம் எனும் மறைந்திருக்கும் ஞானத்தை நாம் தேடித்தான் காண வேண்டும்

தீபாவளி அன்று நரகாசுரன் அழிந்ததைக் கொண்டாடுகிறோம். இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்து படைத்து புத்தாடைகள் வைத்துக் கொண்டாடுகிறோம். இதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான். அன்றைய இனிப்பு பலகாரங்களில் அதிரசம் முக்கியமானதாக அமைந்திருக்கும்.

கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணனைக் கொண்டாடுகிறோம். எல்லோருக்கும் பிடித்தமான அழகுக் குழந்தை அவன். வெண்ணெய் அவனுக்கு மிகப் பிடிக்கும். மாவுடன் வெல்லம் சேர்த்து அதனுடன் வெண்ணெயும் கலந்த சின்னஞ்சிறு உருண்டைகளாக உருட்டி. அதனை எண்ணெயில் வறுத்து சீடை தயாரித்து கண்ணனுக்குப் படைக்கிறோம். மொறு மொறுவென்றிருக்கும் சீடைகளைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு கடித்து,  ரசித்து, ருசித்துத் தின்பது நமது பற்களுக்கு நல்லது.

சிவபெருமானின் நெற்றியிலிருந்து தோன்றியவன் முருகப் பெருமான். நெருப்பு வடிவாக உருவானவன் முருகன். கார்த்திகை தீபத்தன்று நெருப்பிலே பொரிக்கப்பட்ட அவல் பொரி, நெல் பொரி போன்றவைகள் சிவனுக்கும், முருகனுக்கும் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. சிவபெருமானுக்கு அன்றுதான் சொக்கப்பனைக் கொளுத்தப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா அம்பாளுக்கு உரித்தான திருவிழா. அந்த ஒன்பது நாட்களிலும் அம்பாள் ஒன்பது வகையான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அந்த ஒன்பது நாளிலும் தினசரி பூஜை வழிபாடு. நவராத்திரி வழிபாட்டில் பங்கேற்ப வருபவர்களுக்கு கண்டல் பிரசாதம். அந்தச் சுண்டலின் ருசியும் அதன் மகத்துவமும் தனியானது. நம் முன்னோர்கள் அதிபுத்திசாலிகள். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் புரதச்சத்து அதிகம் தேவை. நவதானியங்களின் ஒவ்வொரு பயறு வகை கண்டல்களிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலை, காராமணி உட்பட ஒன்பது வகையான பயறுகளிலும் ஒவ்வொரு நாளிலும் கண்டல் தயாரித்துப் பிரசாதமாக வழங்கி உண்பது என்பது பெண்கள் அனைவரின் உடல்நலத்துக்கு மிகவும் உகந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com