முதல் பெண் விண்வெளி சுற்றுலாப் பயணி!

அனுஷே அன்சாரி
அனுஷே அன்சாரி

அனுஷே அன்சாரி உலகிலேயே நான்காவது சுயநிதி விண்வெளி சுற்றுலாப் பயணி ஆவார். அதுமட்டுமின்றி  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுயநிதியில் பறந்த முதல் பெண்மணி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். ஈரானில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த அன்சாரி, சர்வதேச விண்வெளி சுற்றுலாப் பயணியாக இருக்க மற்றவர்களையும் இன்றளவும் பலரையும் ஊக்குவித்து வருகிறார்.

அதோடு ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர் மற்றும் விண்வெளிக்குச் சென்ற முதல் இஸ்லாமியப் பெண் எனவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு பயணமாக எட்டு நாட்கள்  செலவழித்து, அங்கு சோதனைகளை மேற்கொண்டார்.

தொழிலதிபர் அன்சாரியின் பயணம்,

1966ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானின் மஷாத் நகரில் பிறந்தவர்தான் அனுஷே அன்சாரி. பின்னர் இவர் தனது குடும்பத்தினரோடு தெஹ்ரானுக்கு குடிபெயர்ந்தார். சிறுவயதிலிருந்தே அன்சாரிக்கு விண்வெளி மற்றும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. அன்சாரிக்கு அவரை விட ஐந்து வயது இளையவரான அடௌசா ரைஸ்யன்  என்ற சகோதரியும் உள்ளார். தன்னுடைய ஏழாவது வயதில் தெஹ்ரானில் உள்ள ‘ஜென்னி டி ஆர்க்’ என்ற பிரெஞ்சு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார். அப்பள்ளியின் பாடமுரையானது ‘ஃபார்ஸி’ மற்றும் ‘பிரெஞ்சு’ என இவ்விரண்டு மொழியிலும் கற்பிக்கப்பட்டதாகும். பின்னர் இவர் 1979ஆம் ஆண்டு  நடந்த ஈரானிய புரட்சி மற்றும் வன்முறைகளின் காரணமாக பல்வேறு விதமான சிக்கல்களையும் எதிர்கொண்டார். 1984ஆம் ஆண்டு அன்சாரி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அப்பொழுது இவருடைய வயது 16. குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்த இவருக்கு தனது குடும்பத்தினரை வழி நடத்த வேண்டிய கட்டாயமும், பொறுப்பும்  இருந்தது. எனவே வேலைக்கு சென்றுகொண்டே  தனது  படிப்பையும் கூடுதல் நேரத்தை ஒதுக்கி வெற்றிகரமாக முடித்தார்.

அன்சாரி வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ‘ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில்’ மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டமும், வாஷிங்டன் DC இல் உள்ள ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெறுள்ளார். இதன்மூலம் தொலைத்தொடர்பு ஆலோசனையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இவருக்கு அமைந்தது.

அனுஷே அன்சாரி
அனுஷே அன்சாரி

பின்னர் அன்சாரி பல்வேறு வெற்றிகரமான வணீகரீதியான தொழில் முயற்சிகளில் களமிறங்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் 1993 இல் அன்சாரி டெலிகாம் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தை நிறுவினார். ஆனால் சில நாட்களிலேயே அந் நிறுவனத்தை சோனஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு சுமார் $750 மில்லியனுக்கு விற்றுள்ளார். அந்த பின் 2006ஆம் ஆண்டு  ‘புரோடியா சிஸ்டம்ஸ்’  நிறுவனத்தின் நிர்வாகத்தில் இணைந்தார். இந்த நிறுவனமானது புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் நுகர்வோரின் டிஜிட்டல் வாழ்க்கை அனுபவங்களை எளிதாக்கும் நோக்கத்தோடு இயங்கும் ஒரு நிறுவனமாகும். தற்போது அவர் அதே நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அன்சாரியின் தொழில் முனைவோர் மனப்பான்மை, ஆராய்ச்சியில் ஆர்வம் மற்றும் துணிச்சல் அவருக்கான  புதிய வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தித் தந்ததுள்ளது. தொழில் நுட்பங்களை இயல்பாகவே ஆராயும் ஆர்வத்தின் மூலம் புதிய புதிய  தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:
திரும்பிப் பார்க்க வைக்கும் திருமலைக்கோட்டை அதிசயங்கள்!
அனுஷே அன்சாரி

அன்சாரியின் விண்வெளிப்பயணம்

விண்வெளித்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக அன்சாரி  விண்வெளி ஆய்வு மற்றும் தொழில் முனைவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.

அன்சாரி ‘XPRIZE’ போன்ற விண்வெளி சார்ந்த முன் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்து, தனது வணிக புத்திசாலித்தனம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி, தனியார் விண்வெளி விமானத்தின் வளர்ச்சியை ஆர்வத்துடன் தொடர்ந்தார். ஒரு தொழில் முனைவோர் மற்றும் விண்வெளி ஆர்வலராக அவரது பயணம் தனியார் விண்வெளி ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கான பாதையாக அமைந்துள்ளது. விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்முனைவில் அன்சாரியின் இந்த அர்பணிப்பும் ஈடுபாடும், இயலாமையை அகற்றி விண்வெளி நட்சத்திரங்களை அனைவரும் எட்டிப்பிடிக்க ஊக்குவிக்கும் முயற்சியாக நம்மால் காண முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com