முடி கொட்டுறது நிக்கலையா? இந்த ஐந்தையும் தவறாம சாப்பிடுங்க.. உடனே சரியாகிடும்!

முடி கொட்டுறது நிக்கலையா? இந்த ஐந்தையும் தவறாம சாப்பிடுங்க.. உடனே சரியாகிடும்!
Editor 1

ன்றைய வேகமான வாழ்க்கையில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துவிட்டது. முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் சரியான முறையில் டயட் எடுத்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் அதிகரிக்கலாம். ஆண், பெண் என அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்வு. ஊட்டச்சத்து குறைபாடு, மன உளைச்சல், உணவு முறை போன்ற பல வித காரணங்களால் தலைமுடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் போதும் முடிகொட்டுவதே பலருக்கும் பெரிய கவலையா இருக்கு.இந்த முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்.

முட்டை: அதிக முடி உதிர்வை சந்தித்தால், முட்டையை சாப்பிடுங்கள். முட்டையை உட்கொள்வதன் மூலம் முடி உதிர்வதை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்க முடியும். முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும்.

புரோட்டீன்களுடன், முட்டையில் பயோட்டின் நிறைந்த உணவு உள்ளது, இது முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கிறது.

கேரட்: முடியின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முடி உதிர்வதைத் தடுக்க வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.

Editor 1

கேரட்டில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதற்காக நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு கேரட் சாப்பிட முயற்சி செய்யுங்கள். கேரட் சாப்பிட்டால் முடி உதிர்வதை நிறுத்தலாம். இதற்கு கேரட் ஜூஸும் அருந்தலாம்.

ஓட்ஸ்: ஓட்ஸ் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு. ஓட்ஸில் இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.

பசலைக்கீரை: கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் கூந்தல் வலுப்பெறும். கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். கீரையில் உள்ள வைட்டமின்கள் பல பண்புகளைக் கொண்டுள்ளன.

அவகேடோ: உங்களுக்கு அதிக முடி உதிர்வு ஏற்பட்டால், நீங்கள் வெண்ணெய் பழத்தை சாப்பிடலாம். அவகேடோவில் அதிகளவில் வைட்டமின் ஈ உள்ளது, இது முடி தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com