உஷா ராஜகோபாலன், மீரா சிவராம கிருஷ்ணன்...
உஷா ராஜகோபாலன், மீரா சிவராம கிருஷ்ணன்...

மீண்டும் இணைந்த பெண் சக்திகள்! (மீஷா Bows)

லைமாமணி டாக்டர் உஷா ராஜகோபாலன், கலைமாமணி மீரா சிவராம கிருஷ்ணன் இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக வயலின் இசைக் கலைஞர்களாக திகழ்ந்து வருகின்றனர். தனித்துவமான கிருதிகள், ராக ஆலாபனை மற்றும் கல்பனா ஸ்வரங்கள் வரையறுக்கும் விதம் போன்றவைகளை அருமையாக கையாள்வதில் வல்லவர்கள். தனித்தனியே நிகழ்வுகள் நடத்துவதோடு, இணைந்தும் வாசித்து வருகின்றனர்.

மங்கையர் மலருக்காக இவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:-

Q

எத்தனை வருடங்களாக இருவரும் இணைந்து வயலின் வாசித்து வருகிறீர்கள்?

A

னித்தனியாக வாசித்துக்கொண்டிருந்த நாங்கள் 1999 முதல் இணைந்து சில வருடங்கள் வாசித்தோம். இடையில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய காரணத்தினால் தடைபட்டது. எனினும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வாசித்து வருகிறோம். ஏதோ ஒரு சக்தி எங்களைச் சேர்த்திருக்கிறது மறுபடியும்.

Q

சேர்ந்து வாசிக்கும் ஐடியா எவ்வாறு...?

A

Soloவாக வாசித்துக்கொண்டிருந்த எங்களை, மிருதங்க இசைக் கலைஞர் காரைக்குடி ஸ்ரீ ஜெயராமன் சார்தான் சேர்ந்து வாசிக்க ஐடியா கொடுத்தார். பிறகு ஸ்ரீ குருவாயூர் துரை டிரஸ்ட் செகரெட்டரி அம்பத்தூர் ஸ்ரீ வெங்கடேஷ் சார், எங்களை அவரது சபா நிகழ்விற்காக வாசிக்க கூற, அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

உஷா ராஜகோபாலன், மீரா சிவராம கிருஷ்ணன்...
உஷா ராஜகோபாலன், மீரா சிவராம கிருஷ்ணன்...
Q

பயிற்சியை எப்படி செய்கிறீர்கள்?

A

ருவரும் சந்தித்து பாட்டுகளைத் தேர்வு செய்து, பயிற்சி செய்து கச்சேரிகள் செய்வது வழக்கம். சங்கதிகளைச் சேர்ந்து வாசிக்க யாரேனும் ஒருவர் வீட்டில் வைத்து பயிற்சி நடக்கும். மேடையில் ராகத்தை வாசிப்போம். இருவருக்குமே திறமை இருப்பதால், நிகழ்வுகள் அருமையாக அமைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
அணிவதற்கு சுகமான மொடால் ரக ஆடைகள் பற்றித் தெரியுமா?
உஷா ராஜகோபாலன், மீரா சிவராம கிருஷ்ணன்...
Q

நினைவில் நிற்கும் நிகழ்வுகள் ஏதாவது...?

A

வ்வொரு கச்சேரியும் மறக்க முடியாததுதான். இருந்தாலும் ‘ஆனந்தம்’ Homeஇல் முதியோர்களின் முன்னணியில் வாசித்ததோடு, அவர்களுக்கு விருப்பமான ராகங்களை வாசிக்கையில் அவர்கள் அடைந்த அளவிட முடியாத மகிழ்ச்சியை மறக்க இயலாது. இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

இவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்...

கலைமாமணி டாக்டர் உஷா ராஜகோபாலன்: Top Grade Artist (All India Radio)

மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் சங்கீதத்தில் முதுகலைப் பட்டதாரி. மேலும் டாக்டரேட் பட்டம் பெற்றவர். பெரிய இசை மேதைகளுக்காக வயலின் வாசித்தவர். வாசித்தும் வருகிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்வுகளை நடத்தியுள்ளார். பல்வேறு விருதுகள் பெற்றவர். சங்கீதம் மற்றும் வயலினை அநேக மாணாக்கர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். இவரிடம் பயின்ற பலர் தற்சமயம் தனியாக கச்சேரிகள் செய்கின்றனர்.

கலைமாமணி மீரா சிவராமகிருஷ்ணன்

ங்கீதம் இவரது நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும். காரணம், இவருக்கு சிறுவயதிலேயே வாசிக்கும் ஞானம் வந்துவிட்டது. இவரது முதல் குரு தாயார் கலைமாமணி ராதா நாராயணன் ஆவார். 9ஆவது வயதிலேய கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பித்த இவரும் பல இசை மேதைகளுக்காக வாசித்துள்ளார். ஆல் இந்தியா ரேடியோவின் Top Grade Artist. இந்தியா மற்றும் வெளிநாடுகள் சென்று அநேக கச்சேரிகள் செய்துள்ளார். விருதுகள் பல பெற்றவர். இவருடைய மகனும், இவருடன் சேர்ந்து வாசிப்பதுண்டு.

மீராவின் முதலெழுத்து உஷாவின் ரெண்டாவது எழுத்து சேர்த்து ‘மீஷா Bows’ எனக் கூறுவது வழக்கம். இத்தனை புகழுக்குக் காரணம் இறையருளும், குருவருளும், குடும்பத்தினரின் ஆதரவும், ரசிகர்களின் பாராட்டுகளுமே. காரணமென்றவர்கள் மங்கையர் மலருக்கு நன்றி தெரிவித்து பேட்டியை நிறைவு செய்தனர்.

logo
Kalki Online
kalkionline.com