தாங்க முடியாத குதிகால் வலி, பாத எரிச்சல் தீர பாட்டி வைத்தியம்..!

தாங்க முடியாத குதிகால் வலி, பாத எரிச்சல் தீர பாட்டி வைத்தியம்..!

குதிகாலில் ஏற்படும் வலி, பாதம் எரிச்சல், வாதம், மதமதப்பு ஆகிய பிரச்னைகள் தீர சில எளிய முறைகளைப் பார்ப்போம். 

குதிகாலில் ஏற்படும் வலி, பாத வலி ஆகியவை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு என பல காரணங்களாக உள்ளன. இதை போக்க சிலர் மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள் ஆனாலும், வலி குறையாது. பலருக்கு பக்க விளைவுகள் கூட ஏற்படலாம். குதிகால் வலி வழக்கமாக ஏற்படும்போது சரியான ஓய்வு மற்றும் எதிர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது தானாகவே குணமடைகிறது.

சிலருக்கு பிற மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் பக்க விளைவாகக் கூட இருக்கலாம். ஆனால் சில இயற்கை வைத்தியங்களை வைத்து குதிகால் வலியை நொடியில் போக்கலாம். அதை தெரிந்து கொண்டு செயல்படுத்த உங்களுக்கு சில வீட்டில் உள்ள பொருள்களே போதும். 

முதலில் வீட்டில் உள்ள அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் வெந்நீரை ஊற்றி வையுங்கள். முன்னதாக பாகற்காயை வட்டமாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நறுக்கிய பாகற்காயை வெந்நீரில் போட்டுவையுங்கள். இதனுடன் ஒரு கையளவு கல் உப்பை போட்டு கொள்ளுங்கள். உப்பு ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படும். ஆனால் வெந்நீர் ஆறும் முன் உப்பை போட்டுவிட வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 

சூடான வெந்நீர் என்தால் பாகற்காயில் இருக்கும் கசப்பு முற்றிலும் இறங்கிவிடும். அதன் பின் கால் பொறுத்துக் கொள்ளும் அளவு வெந்நீரின் சூடு இருக்கும்போது வலி கொண்ட இரண்டு பாதங்களையும் அதில் வைக்கவும். முதலில் பாதங்களுக்கு சூடு தெரியும். பின்னர் பழகிவிடும். இப்படியே 10 நிமிடங்கள் கால்களை தண்ணீரில் வைத்து கொள்ள வேண்டும்.

பாகற்காய் நீரில் கால்களை வைத்து வெளியே எடுத்த பின், இரண்டு துளிகள் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு தூங்க சென்றால் தூக்கமும் நன்றாக வரும். இப்படியே 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும். குதிகால் வலியை மாத்திரை இல்லாமல் குணப்படுத்த இந்த முறையை செய்து பாருங்கள்.  நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி தொடர்ந்து மசாஜ் செய்யும்போது பாதங்களில் இருக்கும் எரிச்சல், அவசியமில்லாத வாத நீர், உப்பு நீர் எல்லாமே குறைவதோடு இல்லாமல், குதிகாலில் உள்ள வலி, எரிச்சல் சுத்தமாக குறைந்துவிடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com