சிறு கீரை பெரும் பலன்கள்

சிறு கீரை பெரும் பலன்கள்

சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. 

சிறுகீரையில் நமது நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த கீரையை தொடர்ந்து எடுத்து வர, மூலநோய் கட்டுப்படும், வாயு மற்றும் வாதநோயை அகலும். மாலைக்கண் போன்ற நோய்கள் குணமாகும்.

சிறு கீரையுடன்மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால், ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுப்பதோடு, விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை எடுத்து கொண்டால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும்.

ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மையை சிறுகீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன், காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை.

சிறு கீரையுடன்மிளகுத் தூள், உப்பு சேர்த்து சமைத்து, கொஞ்சம் நெய்யோடு சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பித்த நோய்கள் குணமாகும்.

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

சிறுகீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com